புதுடெல்லி: மோடியின் ’சுச் பாரத்(தூய்மையான இந்தியா)’ திட்டத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வர்த்தக மையமான சாந்தினி சவுக்கை புறக்கணித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பா.ஜ.க ஆளும் மாநகராட்சி கவுன்சில், டெல்லியை சுத்திகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் சாந்தினி சவுக்கின் பக்கம் தமது பார்வையை செலுத்தவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
சாந்தினி சவுக்கில் ஒடுங்கிய தெருக்களிலெல்லாம் குப்பைக்கூழங்கள் இப்போதும் குவிந்து கிடக்கின்றன.முக்கிய சாலையில் கடந்த சில தினங்களாக சாக்கடை நிறைந்து வெளியே கழிவுநீர் ஒழுகுகிறது.இதர பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் திட்டம் ஆரம்பித்த பிறகும் இதுதான் நிலைமை.இதனால் பல வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அன்றாடம் நகரத்தை சுத்தப்படுத்தும் வழக்கம் நகரத்தின் இதர பகுதிகளில் நடந்தபோதிலும் சாந்தினி சவுக்கை புறக்கணித்துள்ளனர்.தெருவில் நெரிசல் காரணமாக கழிவுகளின் மீது காலை அழுத்தாமல் நடந்து செல்ல முடியாது.
டெல்லியில் நெரிசல் மிகுந்த வர்த்தக மையங்களில் ஒன்று சாந்தினிசவுக்.’தூய்மையான இந்தியா’ திட்டம் ஆரம்பித்த உடன் தங்களுடைய நிலைமை மாறும் என்று சாந்தினிசவுக்கில் உள்ள வியாபாரிகளும், அங்கு வசிப்போரும் நம்பியிருந்தனர்.ஆனால், எந்த மாற்றமும் நிகழவில்லை. செங்கோட்டை, ஜும்ஆ மஸ்ஜித் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் சாந்தினிசவுக்கில் உள்ளன.செங்கோட்டையின் முக்கிய வாசலான லாஹோரி கேட் சாந்தினி சவுக்கில் தான் உள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக