பெரம்பலூர் அருகே பலத்த மழையால் ஏற்பட்ட கல்லாறு காட்டாற்று வெள்ளத்தில் 400க்கும் மேற்பட்ட ஆடுகள் அடித்து செல்லப்பட்டது!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் ஆட்டுப்பட்டி அமைத்து ஒவ்வொரு இடங்களிலும் ஆடுகளை மேய்த்து வருகிறார்.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது, நேற்று வேப்பந்தட்டை பகுதியில் பல மணி நேரம் பலத்த மழை கொட்டியது. அப்போது காட்டாற்று வெள்ளம் கல்லாற்றில் பாய்ந்து வந்தது. இதில் ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 120 ஆடுகளும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
கண் இமைக்கும் நேரத்தில் ஆடுகள் அனைத்தையும் வெள்ளம் இழுத்து சென்றது. இன்று காலை ஆட்டுப்பட்டிக்கு வந்த கோவிந்தராஜ் காட்டாற்று வெள்ளம் அந்த பகுதியில் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் தனது ஆடுகள் கரையோரம் இறந்து கிடப்பதை கண்டார். இதனால் பதறியபடி தனது ஆடுகள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி போனதே என்று அலறினார். மேலும் அனைத்து ஆடுகளையும் கிராம மக்களோடு சேர்ந்து பதறியபடி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
வெள்ளத்தில் சிக்கிய ஆடுகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்!
இதேபோல் பெரம்பலூர் மாவட்ட எல் லையான பசும்பலூர் பெரியவடகரை பகுதிக்கும், சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா ராஜபாளையத்தை சேர்ந்த சிங்காரம், சின்னசாமி, தங்கவேல் ஆகியோர் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில் அடைத்து மேய்த்து வந்தனர். நேற்று முன்தினம் இப்பகுதியிலும் கனமழை பெய்தது. பட்டியை அடுத்த ஓடிய காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் 271 ஆடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 150 ஆடுகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. மீதமுள்ள ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சம்பவ இடத்தில் ஆர்டிஓ ஜெயச்சந்திரன், கெங்கவல்லி தாசில்தார் சக்திவேல், வேப்பந்தட்டை தாசில்தார் ஏழுமலை, ஆர்ஐ சுகுணா, விஏஓக்கள் ஆறுமுகம், கைலாசம், உமாமகேஸ்வரி ஆகியோர் சென்று பார்வையிட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் 358 ஆடுகள் வெள்ளத்தில் சிக்கிய இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக