லக்னோ: சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் அப்பாஸ் அலி தனது 94வது வயதில் அலிகரில் காலமானார். சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர் கேப்டன் அப்பாஸ் அலி. உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் வசித்து வந்த அவர் இன்று தனது 94வது வயதில் காலமானார்.
கேப்டன் அப்பாஸ் பர்மா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவ வீரராக பணியாற்றியவர். பிரித்தானிய அரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல் மரண தணடனை வழங்கியது. பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947ம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களுடன் சேர்ந்து தேச நலனுக்காக மீண்டும் போராடி கைது செய்யப்பட்டு 1977ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார் அப்பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி
பாஷா ஹாஜா மொய்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக