Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 ஜூலை, 2015

இன்று 30-07-2015 நமதூரில் கடை அடைப்பு ...


டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி லெப்பைக்குடிக்காடு நகர வியாபாரிகள் கடையடைப்பும்,ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அடையாள வேலை நிறுத்தமும் மேற்கொண்டனர்.

யாகூப் மேமனுக்கு தூக்கு – வார்த்தைகளால் விவரிக்க முடியாத கீழ்மை!

யாகூப் மேமன் இன்னொரு அப்சல் குரு. முஸ்லிம்கள் காவு கொடுக்கப்படுவது புதிதுமல்ல, இது முதன் முறையுமல்ல. சிறையில் இருக்கும் தூக்கு தண்டனைக் கைதிகளில் 94% பேர் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் என்கிறது தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தின் ஆய்வு. முஸ்லிம்களைக் கொன்றதற்காக ஒரு இந்து வெறியனோ, தலித்துகளைக் கொன்றதற்காக ஒரு சாதி வெறியனோ இதுவரை இந்த நாட்டில் தூக்கிலிடப்பட்டதில்லை.

வியாபம் ஊழலில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் – பாஜக அமைச்சர்கள்!! – அம்பலப்படுத்திய என்டிடிவி!

வியாபம் ஊழலில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் பாஜக அமைச்சர்கள் சிக்குகின்றனர். ஊழல் பணம் பங்கு போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதை என்டிடிவி செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச தேர்வாணையத்தின் ஊழலில் ஆர்எஸ்எஸ் புள்ளிகள், அமைச்சர்கள் பெரிய அளவில் சிக்கியுள்ளனர். பெரிய பெரிய புள்ளிகளுக்குப் பணம் பட்டுவாடா திட்டமிட்ட வகையில் நடைபெற்றுள்ளது. என்டிடிவி நிறுவனம் விலாவாரியாக அம்பலப்படுத்தியுள்ளது.

யாக்கூப் மேமன் – உயிர்வாழ்வதற்கான இறுதிகட்ட முயற்சிகள் ஒரு சுருக்கமான பார்வை

ஜூலை 29 – காலை 11 மணி – 14 பக்க கருணை மனு ஒன்று யாக்கூப் மேமன் சார்பில் குடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்கப்படுகிறது
ஜூலை 29 – மாலை 4 மணி – குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கருணை மனுவை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கிறார்
ஜூலை 29 – இரவு 8.30 மணி – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஷ்டிரபதி பவனுக்கு வருகிறார். குடியரசுத்தலைவரிடம் கருணை மனு விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசின் முடிவை சொல்கிறார்.

புதன், 29 ஜூலை, 2015

நமதூர் குடிநீர் தண்ணீருக்கு தீர்வு கொடுத்த SDPI கட்சி ...


 லெப்பைக்குடிக்காடு பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக குடிநீரில் சாக்கடை கலந்து இருப்பதை ஆதாரத்துடன் பலமுறை பேரூராட்சி

இலக்கிய விழா ...


கவிஞர்'அசலெப்பை அப்துல்லா' அவர்களின் இலக்கிய விழா 28-07-15 லெப்பைக்குடிக்காடு சந்தை திடலில் சிறப்பாக நடைபெற்றது.

செவ்வாய், 28 ஜூலை, 2015

இன்று இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் ...

பேரூராட்சியின் துரித நடவடிக்கை ...


குடிநீர் உடைப்பை உடனடியாக சரி செய்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்...!இதைபோலவே அனைத்து செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் அவா..!

யாகூப் மேமன் வழக்கு: மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

சீராய்வு மனு விதிகள் தொடர்பான விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துமாறு, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் டைகர் மேமன் தலைமறைவானதை தொடர்ந்து அவருடைய தம்பி யாகூப் மேமன் வழக்கில் அரசிற்கு உதவி செய்வதற்காக இந்தியா வந்து

சொல்லும், செயலும். – சிறுகதை

முஹம்மது யாகூப், ஒரு இஸ்லாமிய அமைப்பின் அந்த பகுதியின் பொறுப்பாளியாவார். நல்ல பேச்சாளர், ஊரில் அவருக்கு நல்ல மரியாதை. எலெக்டிரிக்கல் கடை சொந்தமாக வைத்திருக்கிறார். ஓரளவு வசதியானவர்.  இஸ்லாம் சம்மந்தமாக இளைஞர்கள் பலர் அவரிடம் பல்வேறு சந்தேகங்களை கேட்பார்கள். அதற்கு அவர் சரியான, தெளிவான விளக்கத்துடம் பதில் அளிப்பார். அதனால் இளைஞர்களுக்கும் அவரை பிடிக்கும். 
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு தலைப்பில் சொற்பொழிவாற்றுவார். அன்றொரு நாள் மாலை பொழுது கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர் சொற்பொழிவை மக்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். “உறவுகளை பேணுவது குறித்தும், அண்டை வீட்டாருடன் எப்படி நடந்து கொள்வது” அந்த உரை இருந்தது.

சிறப்புற நடைபெற்ற சமாதானக் கலைவிழா 2015

ஆர்ட் ஆஃப் பீஸ் பவுன்டேஷன் சாா்பாக சென்னை மயிலாப்பூாில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலைவிழா -2015 என்ற நிகழ்ச்சி 26.07.2015 அன்று நடந்தது. இதில் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம், உணா்வாய் உன்னை புத்தக வெளியீடு, அவள் குறும்படம் வெளியீடு, இஸ்லாமிய ஆளுமை விருது வழங்கல் மற்றும் புதிய மூன்று குறும்படங்கள் தொடக்கவிழா நடந்நது. இந்த விழாவிற்கு முனைவா் பேரா. ஹாஜா கனி அவா்கள் தலைமை வகிக்க,

நூல் அறிமுகம் ”இது மோடியின் காலம்” – அ.மார்க்ஸ்

நூல்: இது மோடியின் காலம்
இடம்பெற்றுள்ள தலைப்புகள்:
1. இந்தியத் தேர்தலில் பா.ச.க வெற்றி உணர்த்துவது என்ன?
2. சமற்கிருதம் வழக்கிழந்த வரலாறும் அதை உயிர்ப்பிக்க முனையும் அபத்தங்களும்
3. கீதை சில குறிப்புகள்
4. அசீமானந்தர்: இராமலிருட்டிண மடத்திலிருந்து அம்பாலா சிறைவரை
5. இது மோடியின் காலம்: 12 சிறு குறிப்புகள்
6. அசாம் இனக்கலவரமும் வங்கதேச முசுலிம்களும்
7. முசாபர்நகர்: வன்முறையின் அரசியல்
8. புனே முசுலிம்கள் மீதான தாக்குதல்: வீழ்ந்த முதல் விக்கட்?
9. மதக்கலவரத் தடுப்பு சட்டவரைவு
10. மோடியின் குசராத் : கோபால்மேனனின் ஆவணப்படத்தை முன்வைத்து

ஞாயிறு, 26 ஜூலை, 2015

நாக்கை பிடுங்கும் ஏழு கேள்விகள் – ஓட்டமேடுத்த நரேந்திர மோடி

14 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி பிஹாருக்கு வருகை தருகிறார். அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். நிறைய வாக்குறுதிகள் எங்களுக்காக காத்திருப்பது தெரியும். ஆனால், ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று?
“பிரதமர் மோடி அவர்களே உங்களுக்கு நான் 7 கேள்விகளை முன்வைக்கிறேன். அவற்றில் 2 பிஹார் மாநிலம் சம்பந்தப்பட்டது, 5 கேள்விகள் பொதுவானவை. இந்திய தேசம் உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது”

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட வேண்டியவர் அல்ல – ‘ரா’ உயர் அதிகாரி பி.இராமன்

பி.இராமன் : எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு உயர் அதிகாரி. ‘ரா’ அமைப்பின் ‘பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் என்கிற வகையில், மும்பை தொடர் வெடிகுண்டுத் தாக்குதலுக்குப்பின் நடைபெற்ற விசாரணையின்போது குற்றச் செயலில் அயல்நாடு தொடர்பான அம்சங்களைப் புலனாய்ந்ததிலும் அவரது சில உறவினர்களியும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து சரணடையச் செய்ததில் அவருக்கு முக்கிய பங்குண்டு. மார்ச் 1993 தொடங்கி அவர் பணி ஓய்வு பெறும் வரை (ஆக 31, 1994) அவர் மேற்கொண்டிருந்த இப்பணிகளை அன்றைய பிரதமர் நரசிம்மாராவ் பாராட்டியுள்ளார்.

யாகூப் மேமன் கருணை மனுவை பரிசீலிக்க குடியரசுத் தலைவரிடம் முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள்

யாகூப் மேமன் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிடம் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

ஃபுகுஷிமா அணுஉலை வெடிப்பு: அணுக்கதிர் வீச்சின் பாதிப்பை உணர்த்தும் மரபுப் பிழை பூக்கள் மற்றும் பழங்கள்!

ஃபுகுஷிமா அணுஉலை வெடிப்பு: அணுக்கதிர் வீச்சின் பாதிப்பை உணர்த்தும் மரபுப் பிழை பூக்கள் மற்றும் பழங்கள்!

ஜப்பான் ஃபுகுஷிமாவில் சுனாமியால் அணு உலைகள் அழிந்து நான்கு

நிறைய பெறுங்க நிறைவாய் வாழுங்க! மக்கள் தொகையை அதிகரிக்க மத்திய அரசு பிரச்சாரம்!

நிறைய பெறுங்க நிறைவாய் வாழுங்க!
மக்கள் தொகையை அதிகரிக்க மத்திய அரசு பிரச்சாரம்!


மத்தியில் பாஜக,சிவசேனா மற்றும் சங்பரிவார் அமைப்பினர் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி சர்ச்சைகளை வளர்த்துவரும் நிலையில், இந்த

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஒரு குடிகாரனுக்கு இருக்கும் மன உறுதி குடிபழக்கமில்லாத சராசரி மனிதர்களிடம் இருக்கிறதா?

எனக்கு தெரிந்த சில குடிகாரர்களிடம் குடிலை கெடுக்கும் குடியை விட்டொழிக்க முடியாதா?என்று கேட்பதுண்டு.இதே கேள்வியை செயின் ஸ்மோக்கர் என்று சொல்லப்படும் சிகரெட்,பான் பராக் பிரியர்களிடமும் கேட்பதுண்டு.
எனது கேள்விக்கு அவர்கள் சொல்லும் ஒரே பதில் பழகி விட்ட ஒன்றை உடனே நிறுத்த முடியாது பாய்.கையெல்லாம் நடுங்கும்,மூளை வேலை செய்யாது அதனால் வேறு வழியில்லாமல் குடிக்கிறேன் என்பார்கள்.

ஆம்பூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆப்பாவி பொதுமக்கள் 118 பேருக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் கடந்த ஜூன் 27ஆம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், 118 பேருக்கும் ஜாமின் வழங்கியதுடன், அவர்கள் யாரும் வேலூர் மாவட்டத்தினுள் நுழையக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. சேலம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தங்கியிருக்க அனுமதி வழங்கியது.

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ – தி.மு.க., தலைவர் கருணாநிதி.

தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதல்வர் ஜெயலலிதாவை வலியுறுத்தி வருகின்றனர்.

யாகூப் மேமன் தூக்கு தண்டனை – ஒரு அரசு தரப்பு வழக்கறிஞரின் ஒப்புதல் கடிதம்

தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு இம்மாத இறுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இவர் இதே வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி டைகர் மேமனின் தம்பி ஆவார்.
20 ஆண்டுகளாக எனக்கு தெரிந்த நீதிபதி பி.டி.கோதி அவருக்கு மரண தண்டனை விதித்தார்.
யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது அவரது வழக்கறிஞர் சதீஸ் கன்சி உள்பட சிலருக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடை கட்டுப்பாடு பெண்ணியத்தை காக்கும் என்று நாம் சொன்னால் நமக்கு பெயர் ஆணாதிக்க திமிர் பிடித்தவனாம்

ஆடை கட்டுப்பாடு பெண்ணியத்தை காக்கும் என்று நாம் சொன்னால் நமக்கு பெயர் ஆணாதிக்க திமிர் பிடித்தவனாம்.
முற்போக்கு சிந்தனை கொள்ளும் பெண்கள்  பெரும்பாலும் தனிமைப்படுவதே இயல்பாகி விடுகிறது.தமது தனிமையை மறைக்க சில புதுமையை வெளிக்கொணரும் திறமையை பெற்று விடுகிறார்கள்.
ஆண்களை போல பெண்களுக்கும் சமவுரிமை உண்டு என்னும் ஆயுதத்தை நம்பி பல்வேறு ஒவ்வாமை கருத்தை விவாதப் பொருளாக்கி வருகின்றனர்.
அதில் ஒன்று ஆடை கலாச்சாரம்.பெண்களுக்கு மட்டும் பர்தா என்னும் ஆடை கட்டுப்பாடு விதிக்கும் ஆண்வர்க்கம் தங்களுக்கு மட்டும் அதில் விலக்களிப்பது ஏன்?என்றெல்லாம் பிதற்றி வருகின்றனர்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

எழுச்சியுடன் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை - தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்


லெப்பைகுடிகாடு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத் பெருநாள் உரை மவ்லவி அல்ஹாஃபில் S.அப்துல் முகத்திம்

நமதூர் கிழக்கு பள்ளி வாசலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை ...

பெருநாள் திடல் தொழுகை - நமதூர் TNTJ ....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக நபிவழியில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை சந்தைதிடலில் இன்று 18/07/2015 (காலை

வெள்ளி, 17 ஜூலை, 2015

“நீ இப்படி அழுதால், இந்த முஹம்மதும் பெருநாளைக் கொண்டாட மாட்டார்”

மதீனா வீதிகளில் ஈத் எனும் பெருநாள் தொழுகைக்காக செல்லும் நபித்தோழர்களின் முழக்கம். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி… புத்தாடைகள்…. நறுமணங்கள்… எங்கும் உற்சாகப் பெருக்கு… முஹம்மது நபியவர்களும் தம் தோழர்களுடன் மதீனா பள்ளிவாசலை நோக்கி, இறைவனை புகழ்ந்தவாறு சென்று கொண்டிருக்க…. ஒரு சிறுவன் மட்டும் வீதியின் ஓரத்தில் தன் முகத்தை கைகளில் புதைத்தவாறு அழுதுகொண்டிருந்தான்.
நபியவர்கள் நின்றார். மற்றத் தோழர்களை, “நீங்கள் தொடருங்கள். நான் பின்பு உங்களை சந்திக்கிறேன்” என்றார். அழுத பாலகனின் அருகில் வந்து, அவனது முதுகைத் தட்டிக் கொடுத்து, “ஏன் அழுகிறாய் குழந்தாய்?’ என பரிவாகக் கேட்டார்.
“இன்று பெருநாள். எல்லா குழந்தைகளும் தம்

நமதூர் கேரளா பேக்கரியின் நண்பக தன்மை கேள்விக்குறியாகிறது ?


நமதூரில் இயங்கி வரும் கேரளா பேக்கரியில் உள்ள ஒரு வகையான கேக்கில் பன்றி புகைப்படம் இருந்ததால் பொரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

நமதூர் த.மு.மு.க சார்பாக வழங்க உள்ள பித்ரா ...


லெப்பைக்குடிக்காடு த.மு.மு.க சார்பாக இதுல்பிதுர் பயனாலிகலுக்கு

பெரம்பலூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 63 மாணவர்கள் படுகாயம்!


பெரம்பலூர்: பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் அருகே, 93 மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 63 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரையில் தனலெட்சுமி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சேரலி, கல்பாடி, மருவத்தூர், ஏரையூர், அகரம்சிகூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.

திங்கள், 13 ஜூலை, 2015

என்னவாகட்டுமே, உண்மை வெளிவரட்டும்!

என்னவாகட்டுமே, உண்மை வெளிவரட்டும்!
தகவல் என்பது அறிவு அல்ல என்று சொல்வார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உண்மைதான். அதேசமயம், தகவல் ஒரு பெரும் அரசியல். சொல்லப்படும் தகவல்களைவிட சொல்லப்படாத தகவல்கள் கூடுதல் அரசியல் பெறுமதி உடையவை. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, சாதிவாரியாக நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விவரங்களைச் சமூகப் பின்னணியுடன் வெளியிடுவதில் மோடி அரசுக்கு என்ன சிக்கல்?
நேற்று முன்தினம் ‘வெல்த் எக்ஸ்’ நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. “அடுத்த மூன்று

நமதூர் மேற்கு பள்ளி வாசலின் தலைவர் அவர்கள் கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி ...


பெரம்பலூர் இராமகிருஷ்ணா கல்வி நிறுவனம்

வெள்ளி, 10 ஜூலை, 2015

ஆம்பூர் கலவரம்: NCHRO உண்மை அறியும் குழு ஆய்வு !

ஆம்பூர்: நேற்று (03 ஜூலை 2015) மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் (NCHRO ) தலைவர் பேரா.அ.மார்க்ஸ் தலைமையில் நான்,பதிரிகையாளர் முஹம்மது ஷிப்லி ,ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு, ஆம்பூர் கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முஸ்லிம் இளைஞர்களின் தொடர் கைது குறித்து ஆய்வு மேற்கொண்டது.
பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் துன்புறுத்தி கொலை செய்த இளைஞர்

வெள்ளி, 3 ஜூலை, 2015

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய உரிமைச்சட்டம் 2009ன்படி, 25சதவிகிதம் ஏழைமாணவர்கள் சேர்கை ..


25% இடஒதுக்கீடு விவகாரம்:
தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களின் பட்டியல் இணையத்தில் வெளியீடு
ஜூலை 02, 2015,

தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத் இரவு தொழுகை ...

மேடை ஏறி பழகுவோம்! சிறந்த பேச்சாளராகும் வரை ...

இதுவரை எந்த மேடையிலும் பேசியதில்லை, ஆனால், பேச வேண்டும் என்று ஆசை இருக்கின்றது, ஆனால் எப்படி பேசுவது என்று இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு சிறிய பலனை தரும். மேடையில் ஏறி பேசுவது என்பது சின்ன விஷயமாக இல்லாவிட்டாலும், பயிற்சியின் மூலம் நம்மாலும் பெற்றுவிட முடியும். முதலில் நாம் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பழக வேண்டும். புதிதாக மேடை ஏறுபவர்களுக்கு, மேடையில் பேசுவது என்பது இரண்டாவது விஷயம். முதலில் அவர் மைக் முடிவு போய் நிற்பதே ரொம்ப முக்கியமான ஒன்றாகும்.

புஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்களுக்கு ...

அஸ்ஸலாமு அலைக்கும்

வி.களத்தூர்: புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மற்றும் லப்பைகுடிகாடு மக்களுக்கு ஈத்பெருநாள் கேக்குகளை , தரமாகவும் சிறப்பாக வழங்கி வருகிறது.இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ஈத் கேக்கைநீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம்தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

புதன், 1 ஜூலை, 2015

பர்தா குறித்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்த எச்.ராஜா பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா குறித்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்த எச்.ராஜா பேச்சுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்   கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கருத்து வருமாறு:–
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மதுரைக்கு வருகின்ற நேரத்தில், மாநிலத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் முயற்சியில் எச்.ராஜா போன்றவர்கள் பேசுவது கண்டனத்திற்குரியது.