Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 26 ஜூலை, 2015

யாகூப் மேமன் கருணை மனுவை பரிசீலிக்க குடியரசுத் தலைவரிடம் முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள்

யாகூப் மேமன் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிடம் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கை மனுவுடன், 'யாகூப் மேமனை ஏன் தூக்கிலிடக் கூடாது' என்ற தலைப்பில், உளவு அமைப்பு 'ரா'-க்கு தலைமை வகித்தவரும், பாகிஸ்தான் பிரிவை கவனித்து வந்தவருமான பி.ராமன் எழுதிய கட்டுரையின் முக்கிய அம்சங்களும் இணைக்கப்பட்டிருந்தது.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் பனசந்த் ஜெயின், ஹெச்.எஸ்.பேடி, பி.எஸ்.சவாந்த், ஹெச்.சுரேஷ், கே.பி.சிவசுப்ரமணியம், கே.சந்துரு, அரசியல் பிரமுகர்களான மணி சங்கர் அய்யர், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, பிரகாஷ் காரத், திருச்சி சிவா, பிருந்தா காரத், சத்ருஹன் சின்ஹா, இவர்களுடன் ராம் ஜெத்மலானி, என்.ராம் மற்றும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், சினிமா, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட்டது, தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட அம்சங்களும் இந்தக் கோரிக்கை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை
'1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு' வழக்கு குற்றவாளியான யாகூப் மேமனுக்கு இம்மாதம் 30-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அவரது மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தனக்கு நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கு தடை கோரி தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இம்மனு மீது நாளை (திங்கள்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.
"இன்னும் சட்ட ரீதியான பரிகாரங்கள் நிறைவடையவில்லை. தண்டனையை நிறைவேற்றுவதில் மட்டுமீறிய அவசரம் காட்டப்படுகிறது. மகாராஷ்டிர ஆளுநருக்கு கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று யாகூப் மேமன் சார்பில் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, யாகூப் மேமனுக்கு வரும் 30-ம் தேதி தூக்கு தண்டனை என அறிவிக்கப்பட்ட பின்னர், நாக்பூர் மத்திய சிறையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1993-ல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரே குற்றவாளி யாகூப் மேமன். இவரது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக