Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 26 ஜூலை, 2015

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட வேண்டியவர் அல்ல – ‘ரா’ உயர் அதிகாரி பி.இராமன்

பி.இராமன் : எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு உயர் அதிகாரி. ‘ரா’ அமைப்பின் ‘பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் என்கிற வகையில், மும்பை தொடர் வெடிகுண்டுத் தாக்குதலுக்குப்பின் நடைபெற்ற விசாரணையின்போது குற்றச் செயலில் அயல்நாடு தொடர்பான அம்சங்களைப் புலனாய்ந்ததிலும் அவரது சில உறவினர்களியும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து சரணடையச் செய்ததில் அவருக்கு முக்கிய பங்குண்டு. மார்ச் 1993 தொடங்கி அவர் பணி ஓய்வு பெறும் வரை (ஆக 31, 1994) அவர் மேற்கொண்டிருந்த இப்பணிகளை அன்றைய பிரதமர் நரசிம்மாராவ் பாராட்டியுள்ளார்.

2007ல் யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது இதழாளர் ஷீலா பட்,’ இணையத் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதினார். The strange case of Yakub Memon, and Why Yakub Memon’s death sentence is surprising என்கிற தலைப்புகளில் இரண்டு பகுதிகளாக அக்கட்டுரை அப்போது வெளிவந்தது. மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் அப்போது கூடுதல் செயலாளராக இருந்த ராமன் அளித்த தகவல்களின் அடிப்படையில் அக்கடுரை எழுதப்பட்டதாக ஷீலா பட் கூறுகிறார்.
யாகூபிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறித்து ராமன் கலகக்முற்றிருந்தார் எனவும் அது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தும் கட்டுரை ஒன்றை அவர் தனக்கு மின்னஞ்சலில் (August 2, 2007, at 9.39) அனுப்பிவைத்ததையும் நேற்று ஷீலா பட் வெளியிட்டுள்ளார். கட்டுரையை அனுப்பிவிட்டுப் பின், அதைப் போட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சொன்ன காரணம் அது வெளியிடப்பட்டால் குற்றச் செயலில் தொடர்புடைய மற்றவர்கள் கைதாவதற்கு அது தடையாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். பின் மீண்டும் ஷீலாவை அழைத்து தன் பெயரில் அல்லாமல் அந்தத் தகவலை வெளிக் கொணருமாறும் ராமன் கூறியுள்ளார்.ஜூன் 16, 2013 ல் ராமன் மறைந்தார்.
ராமன் தேசப்பற்று மிக்கவர். பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும், வெளி நாடுகளில் ஒளிந்துள்ள பயங்கரவாதிகளை வெளியே கொண்டு வருவதிலும், அவர்கள் வெளிநாடுகளில் ஒளிந்திருப்பதைச் சாத்தியமில்லாமல் செய்வதிலும் இந்திய உளவுத் துறையின் சாதனைகள் குறித்துப் பெருமை கொள்பவர்.
இத்தனைக்கும் மத்தியில் அவருக்கு இது குறித்து அறம் சார்ந்த ஒரு பார்வை இருந்தது. 2006ல் அஃப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும் அவர் அது குறித்து ‘இன்னும் ஆழமாக விசாரிக்கப்பட வேண்டும்’ என்கிற ரீதியில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அப்போது விஜய்சங்கர் எனும் ஒரு வாசகர் ஒரு அய்யத்தை எழுப்பினார். அதற்கு ராமன் அளித்தபதிலை ஷீலா சுட்டிக் காட்டுகிறார். அது :
“நான் (இந்தக் கட்டுரையில்) என்ன சொல்லியுள்ளேனோ அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனது கருத்து இதுதான்: “அவர்கள் (பயங்கரவாத நடவடிக்கையில் இருக்கும்போது) அவர்களைக் கொல்லுங்கள். காவலில் இருக்கும்போது கொல்லாதீர்கள்.ரொம்ப நியாயமான விசாரணை நடத்திக் கூட (கொல்லக் கூடாது). அரசு ஆதரவுடன் கூடிய பயங்கரவாதத்தை இரத்தம் கக்க வையுங்கள் (இந்த நடவடிக்கைக்கு) தங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தவர்களை (மற்ற குற்றவாளிகளிடமிருந்து வேறுபடுத்திப் பாருங்கள்” – மரியாதைகளுடன் ராமன்.
ராமனின் கருத்து இதுதான்: யாகூபிற்கும் மும்பை தொடர் குண்டு வெடிப்பிற்கும் உள்ள தொடர்பு என்ன என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அவர் எந்த அடிப்படையில் இங்கு வரச் சம்மதித்தார் என்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும். பாகிஸ்தானுக்கும் இந்தப் பயங்கரவாதச் செயலுக்கும் உள்ள தொடர்பு மற்றும், குற்றவாளிகளை அது வைத்துப் பாதுகாப்பது ஆகியவற்றை உலகின் முன் நிறுவுவதில் அவர் இந்தியாவுக்கு உதவி செய்துள்ளார். அவரை இப்படி நடத்துவது அறமல்ல என்பதுதான் ராமனின் சிந்தனை ஓட்டம்.
யாகூப் மேமனுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு மும்முரமாக இருக்கும் சூழலில் நேற்று ஷீலா பட் ராமன் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். 2007 ஆக 2 காலை 09.39 மணிக்கு ஷீலாவின் மெயில் இன்பாக்சில் அக் கடிதம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
அக்கடிதம் முழுமையாகக் கீழே உள்ளது. அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:
“தான் பழைய டெல்லியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராசிகியூஷன் சொல்வதை, விசாரணை தொடங்கியது முதல் யாகூப் மறுத்து வந்துள்ளார். ஆக அதிக பட்சமான தண்டனையை யாகூபிற்குப் பெற்றுத் தந்துவிட வேண்டும் எனச் செயல்பட்ட பிராசிகியூஷன் இதை ஏற்கவில்லை.”
யாகுப் தானாக முன்வந்து இந்தியாவுக்கு வந்ததாகவும் காத்மான்டுவில் வைத்து ஜூலை 19, 1994ல் கைதானதாகவும் கூறுகிறார். ஆனால் வழக்கை விசாரித்த சி.பி.ஐயோ ஆகஸ்ட் 5, 1994ல் புது டெல்லியில் வைத்துக் கைது செய்ததாகக் கூறி வருகிறது. இதைத்தான் ராமன் இங்கு தொட்டுக்காட்டுகிறார். மேலும் அவர் சொல்வதில் சில வரிகள்:
“யாகூப் மேனன் மற்றும் அவரது குடும்பத்தாரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் வேகத்தை (அதனூடாகத் தண்டனையையும்) தணிக்கக் கூடிய சில சூழல்களை (some mitigating circumstances)நீதிமன்றத்தின் பார்வைக்கு பிராசிகியூஷன் கொண்டு வராதது எனக்குக் கவலை அளிக்கிறது. தண்டனை வழங்கும்போது இவற்றை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அது கோரவில்லை… ….எப்படியாவது மரண தண்டனை பெற்றுத் தந்துவிட வேண்டும் என்கிற பேராவலில் பிராசிகியூஷன் இப்படிச் செய்துள்ளது”
“இந்தியப் புலனாய்வுத் துறையுடன் மேமன் ஒத்துழைத்துள்ளார். கராச்சியில் இருந்த அவரது குடும்பத்தினர் சிலரையும் பாக். உளவுத் துறையிடம் (ISI) இருந்து விடுபட்டு துபாய்க்கு வந்து இந்திய அதிகாரிகளிடம் சரண் அடைவதற்கும் அவர் ஒத்துழைத்துள்ளார்…. இப்படி யாகூப் அளித்த ஒத்துழைப்பு என்னைப் பொருத்த மட்டில் அவருக்கு மரண தண்டனை அளிப்பது குறித்த முடிவில் தண்டனையைத் தணிக்கும் ஒரு வலிமையான அம்சமாக உள்ளது..”
ஒரு உளவுத் துறை அதிகாரி என்கிற முறையில் இப்படியான தண்டனைகள், பயங்கரவாதக் குற்றங்களின் சில முக்கிய சிடுக்குகளை அவிழ்க்க இயலாமல் செய்துவிடும், எல்லை தாண்டிய பயங்கரவாதங்களை அடையாளம் காட்ட இயலாமல் செய்துவிடும், ஓரளவு ஒத்துழைக்கக் கூடியவர்களை உயிருடன் பிடித்து விசாரிக்கும் வழியை அடைத்துவிடும் என்கிற கவலையையும் ராமன் கொண்டுள்ளதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக