Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 10 ஜூலை, 2015

ஆம்பூர் கலவரம்: NCHRO உண்மை அறியும் குழு ஆய்வு !

ஆம்பூர்: நேற்று (03 ஜூலை 2015) மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் (NCHRO ) தலைவர் பேரா.அ.மார்க்ஸ் தலைமையில் நான்,பதிரிகையாளர் முஹம்மது ஷிப்லி ,ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு, ஆம்பூர் கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முஸ்லிம் இளைஞர்களின் தொடர் கைது குறித்து ஆய்வு மேற்கொண்டது.
பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் துன்புறுத்தி கொலை செய்த இளைஞர்
ஹமில் (ஷபீர்)அகமதுவின் மாமனாரை சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்தது.தொடர்ந்து ஆம்பூர் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களின் குடும்பத்தினரை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தது.ஆம்பூர் ஹௌசிங் போர்டு பகுதியில் முழுக்க ,முழுக்க முஸ்லிம்களே வசிக்கிறார்கள். இப்பகுதியிலிருந்து தான் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.காவல்துறை அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து கதவுகளை உடைத்து வன்முறையாக கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, கைது செய்யப்பட்டவர்களில் பள்ளி கல்லூரி மாணவர்களும் அடங்குவார்கள்.இவர்களில் பலரை காவல்துறை விடுவித்தும் உள்ளது..
கள ஆய்வை முடித்துக்கொண்டு, ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில்  முகாமிட்டிருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமாரியை இக்குழு சந்தித்தது.காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேரா.மார்க்ஸ்சிடம் விளக்கினார் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தி குமாரி.செந்தில் குமரியுடன் பேசிக்கொண்டிருந்த நிலையில், நமது கள ஆய்விற்கு உதவிகரமாக நம்மோடு பயணித்த -நமக்காக வெளியில் காத்துக்கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்கள் நால்வரை பார்த்த ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன்,தாலுகா இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் அவர்களிடம் இருந்த செல்போனை பிடுங்கிகொண்டு காவல்நிலையத்திற்குள் அவர்களை அழைத்து வந்து கைது செய்யும் நடவடிக்களை துவக்கினர்.இது அங்கிருந்த டி.எஸ்.பி கணேசனுக்கு தெரிந்தே நடந்திருக்கிறது.பின்னர் ,இது குறித்து பேரா.மார்க்ஸ் எஸ்.பி செந்தில் குமாரியிடம் பேச…அவர் ‘என்ன கணேசன் இது…ஏன் இப்படி செய்யுறீங்க; இவர்களோடு வந்தவர்களை ஏன் கைது செய்கிறீர்கள் ” என்றதோடு, அனைவரையும் விடுவிக்கச் சொன்னார்.
நம் கண் முன்னே நடந்த இந்த சம்பவமே ஆம்பூர் காவல்துறை சகட்டு மேனிக்கு கண்ணில் படும் அப்பாவிகளை கைது செய்கிறது என்பதற்கு சான்றாகும்.
முதல் கட்ட ஆய்வை நடத்திய பின் ,அன்று மாலை வேலூர் ரிவர் வியு ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இக்குழு..
செய்தியாளர்களிடம் பேசிய NCHRO தலைவர் பேரா.அ.மார்க்ஸ், ஆம்பூர் வன்முறையை கடுமையாக கண்டித்ததோடு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அப்பாவிகள்; இது போன்ற கைதுகள் தவிர்க்கப்படவேண்டும்;இவை வேறு விதமான சிக்கல்களை உருவாக்கும்;அரசாங்கம் இது போன்ற கைதுகள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பேரா.மார்க்ஸ்,இது முதற்கட்ட ஆய்வு தான், முழுமையன ஆய்வை விரைவில் மேற்கொள்வோம்.நடைபெற்றுள்ள சம்பவத்தை பொறுத்தவரை அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது உணர முடிகிறது.அதை வெளிப்படுத்துவது தான் இந்த செய்தியாளர் சந்திப்பின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பள்ளிகொண்டாவில் ஷாமில் அஹமதுவை அடைத்து வைத்து இன்ஸ்பெக்டர் மார்டின் சித்திரவதை செய்த கெஸ்ட் அவுஸ் சை பார்வையிட்டோம்.இந்த அவுஸ் அவுசிற்கு அருகாமையில் வசிக்கும் உள்ளூர் கவுன்சிலர் உள்ளிட்ட மக்கள், இரவு நேரங்களில் இந்த கேசட் அவுசிலிருந்து கதறும் சப்தம்கேட்டது என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக