இந்தியா மாறி கொண்டிருகிறது நாம் மாறவேண்டும், இன்னும் 2002குஜராத்தில் நடந்த விபத்தை மட்டுமே வைத்து 2015 மோடியின் இந்தியாவை மதிப்பிடுவது தவறு என்றும்,அவ்வாறு மதிப்பிட்டால்,தேசத்தின் மீதான உங்கள் மதிப்பு சந்தேகத்திற்கு உரியது என்றும் பரிவாரங்கள் புளுகத் தொடங்கிவிட்டன. இதன் விளைவாய் உங்கள் மீதான மதிப்பை மறுபரி பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தேசத்தை தள்ளுகிறீர்கள் என்று மாற்றத்திற்கான வரையரையும் தேசியத்திற்கு புதிய இலக்கணத்தையும் வகுத்து அக்ரஹாரத்து அம்பிகளும்,அதனை வழிமொழியும் மோடியின் தம்பிகளும் பிரமிப்பூட்டுகிறார்கள்.
மறுபுறம் இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களை குழிதோண்டி புதைக்கும் துவேஷ கருத்துக்கள்,பணவீக்கம் ,பொருளாதார மந்தநிலை , ஊழல்,வெளிப்படையற்ற அரசு நிர்வாகம்,பங்குசந்தை வீழ்ச்சி,விலைவாசி உயர்வு, கடமை தவறும் நீதித்துறை, உளவு துறையின் உளறல்களை ஊர்பரப்பும் ஊடகங்கள் என அனைத்து துறைகளிலும் கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது இந்தியா.