Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 23 செப்டம்பர், 2015

முஹம்மது அஹமது ! (ஒரு பார்வை)

இன்றைக்கு முஹம்மது அஹமது விவகாரம் ,உலகமெங்கும் பேசப்படுகிறது .அமெரிக்காவில் தான் செய்த கடிகாரத்தினை ,தனக்கு படித்துக் தரும் ஆசிரியரிடம் காண்பிப்பதற்காக கொண்டுச் சென்றவனை ,வெடிகுண்டு கொண்டு வந்திருப்பான் என்கிற அனுமானத்தில் அவனைப் போலிசிடம் ஒப்படைத்தனர்.பிறகுதான் தெரிந்தது.அது குண்டு அல்ல ,கடிகாரம் என்பது .பின்னர் அஹமது விடுவிக்கப்பட்டான்.இவ்விவகாரம் வெளியானப் பிறகு ,ஒபாமா வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறார் அஹமதுவை.இப்படியாக லட்சக்கணக்கில் அஹமதுவிற்கு ஆதரவு குவிகிறது.சரி !சந்தோசம் மகிழ்ச்சி.
        அதேவேளையில் நாம் ஒன்றினை நினைவு கொள்ள வேண்டும்.சந்தேகப்பட்ட அந்த ஆசிரியருக்கும்,அஹமதுவிற்கும் ,ஏதேனும் முன் பின் பகைகள் இருந்தனவா ??இல்லையே..! பிறகு ஏன் அவ்வாசிரியருக்கு அவ்வாறான எண்ணம் வர வேண்டும்,அவ்வெண்ணத்தை விதைத்தது எது.!? காட்சி ஊடகங்களும்,அச்சு ஊடகங்களும் திரும்ப,திரும்ப ஒரு சாராரை ,தவறாக சித்தரித்ததுதானே…?அந்தச் சிறுவன் மீதும் சந்தேகப் பார்வை விழச் செய்தது.எந்தவொரு இஸ்லாமிய அடையாளமான ,தாடியோ ,தொப்பியோ இல்லாத இந்தச் சிறுவனுக்கே இந்தக் கதியென்றால்,இஸ்லாமிய அடையாளங்களோடு வாழுபவர்கள்,எதிர்கொள்ளும் சங்கடங்கள் ,சந்தேகப்பார்வைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை,பொய்ப்பிரச்சாரம் செய்யும் ஊடகங்களும்,பரபரப்புச் செய்தி என வெளியிட்டு வயிறு வளர்ப்பவர்களும் சிந்தித்திட வேண்டும்.திருந்திட வேண்டும்.
       அப்படியென்றால் இஸ்லாமியர்களில் கெட்டவர்கள் இல்லையா!? என கேள்விகள் எழலாம்.கெட்டவர்கள் இருக்கலாம், அதேவேளையில் அந்த “கெட்டவை”களை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.”அநியாயமாக ஒரு உயிரைக் கொல்ல” குர்ஆனும் அனுமதிக்கவில்லை,நபிகளார் வாழ்விலும் அது நடக்கவில்லை .அப்படி இருக்கையில் ,அநியாயமாக நடப்பவர்கள்,இஸ்லாத்தைப் புரிந்துக் கொண்டவர்கள்தானா !?இல்லை ,யாருக்கேனும் அவர்கள் கைக்கூலிகளா!? எனவும்,தனிப்பட்ட  சிலர் செய்து தவற்றிற்கு ஒரு மார்க்கத்தின் மீது பழி சுமத்துவது நியாயமா !? என செய்தி வெளியிடுபவர்கள் சிந்தித்து செய்திகளை வெளியிடுங்கள்.அப்பாவிகளை குற்றவாளிகளாக்க உங்களது பேனா மையை பயன்படுத்தாதீர்கள் .செய்திகளை வெளியிடுவதற்கு முன் உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்குமேயானால் ,அதனையும் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக