Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

உயிரூட்டப்பட்ட நீதிதேவதை!

தணலின் மீது விழுந்த தூறல் போல தாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம், ஆனால் கேட்பாரற்று அனாதைகளாகிவிட்டோம் எனும் வேதனை நெருப்பில் வெந்து கொண்டிருந்த கஷ்மீரத்து முஸ்லிம்கள் மனதில் ஒரு நம்பிக்கைச் சுடராக உன்னதமான தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதையும் நமது இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ளதுதான் நமது கண்களை ஆனந்தத்தில் பனிக்கச் செய்கிறது.

பீடிகை போதும். நேராக விஷயத்திற்கு வருகிறேன். கடந்த 2010 ஏப்ரல் 29 அன்று கஷ்மீரத்து இளைஞர்கள் ரியாஸ் அஹமத், முஹம்மது ஷஃபீ, ஷாசத் அஹமத் ஆகிய மூவரையும் நமது இராணுவத்தினர் அநியாயமாக படுகொலை செய்தனர். ஒண்ணறை இலட்சம் ரூபாயை கைமாறாக வாங்கிக்கொண்டு பஷீர் அஹமது எனும் ஒரு போலீஸ் அதிகாரி இந்த மூவரையும் இராணுவ அதிகாரி வசம் ஒப்படைத்துள்ளான். [காசுக்காக இவனைப் போன்றவர்கள் எதையெல்லாம் கூட்டிக் கொடுப்பார்களோ?]
அந்த வீரபராக்கிரம இராணுவ அதிகாரியும் அவரோடு பணியாற்றிய மற்றவர்களும் சேர்ந்து இந்த அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி போலியாக கொடூரமாக என்கவுண்டர் படுகொலை செய்துள்ளார்கள்.
வழக்கம் போல பணப் பரிசுகளும், பதவி உயர்வும் கிடைக்கும் என மனப்பால் குடித்துக்கொண்டிருந்த இந்த பாதகத்தை செய்தவர்களுக்கு பூ பறிக்க போனவனை பூ நாகம் தீண்டிய கதையாக பரிசுகளுக்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது நமது இராணுவ நீதிமன்றம்.
வருடம் ஐந்து கடந்த பின் கிடைத்த நீதியே என்றாலும் இராணுவ சிறப்பு சட்டங்களால் மரணத்தின் விளிம்பில் கிடந்த நீதி தேவதைக்கு இந்த தீர்ப்பு பிராண வாயு போல் அமைந்துள்ளது எனலாம். இதுபோன்ற ஒரு தீர்ப்பு காங்கிரஸ் காலத்தில் வந்திருந்தால் நமது பரிவார் பஜ்ரங்குகள் பலவித கூப்பாடுகள் போட்டிருப்பார்கள். இராணுவத்தின் கை கட்டப்படுகிறது எனவோ அல்லது சிறுபான்மையினரை தாஜா செய்கிறது காங்கிரஸ் எனவோ இன்னும் வாய்க்கு வந்தபடி வசை மாறி பொழிந்திருப்பார்கள். பீகார் தேர்தலோடு பின்னிப் பிணைத்திருப்பர். எது எப்படியோ நீதியின் நாடி துடிக்க துவங்கியுள்ளது. இராணுவ நீதி மன்றத்திற்கு ஒரு ராயல் சல்யூட்!
S.M. ரஃபீக் அஹமது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக