Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 14 செப்டம்பர், 2015

“இறைச்சி விற்பனை தடை” உத்தரவை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்!

மும்பை:   மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வரும் 17ம் தேதி இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மும்பை மாநகராட்சியால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்த்து ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்த மனுவை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனுப் வி. மோத்தா, அஜ்மத் சயாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இறைச்சி விற்பனை உள்ளிட்டவற்றை 2 நாள்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டே மகாராஷ்டிர அரசு விதிகளை கொண்டு வந்திருந்தாலும், அதை இதுவரை முழுமையாக செயல்படுத்தவில்லை. ஆனால், திடீரென அந்தத் தடையை 4 நாள்களாக நீடித்தது ஏன்?

அதேசமயம், வன்முறை கூடாது என்று வலியுறுத்தும் ஜைன மதத்தினருக்காக ஆடு, கோழி இறைச்சிகளுக்கு மட்டும் தடை விதித்துவிட்டு, மீன்கள், முட்டைகளுக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக