Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

மக்கள் நல கூட்டமைப்பில் பிளவா?


ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 5 கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி
உள்ளன.இந்த கூட்டணியில் வைகோ எடுத்த சில முடிவுகள் அவருக்கு எதிராக திரும்பி உள்ளன.இதனால் 5 கட்சி கூட்டணியிலும் பிளவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் வைகோ தன்னிச்சையாக முடிவு எடுத்து விட்டதாக மனித நேய மக்கள் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியதாவது”மக்கள் நல கூட்டமைப்பு என்பது மக்கள் பிரச்சினைக்காக போராடவும், நியாயம் கேட்கவும் உருவாக்கப்பட்டது”. இந்த கூட்டணி அரசியல் கூட்டணியாக மாறுவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 13–ந்தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் இது அரசியல் கூட்டணி என்று அறிவித்தார்.கோவில்பட்டியில் நடைபெற்ற பந்த் ஆதரவு பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ செப்டம்பர் 15 வரை காத்திருக்க வேண்டியதில்லை. 5 கட்சி கூட்டணி என்பது அரசியல் கூட்டணி. அ.தி.மு.க., தி.மு.க.வுடன் சேரப்போவதில்லை என்றார்.இதில் எங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு சில கொள்கைகள் உள்ளன. நாம் பேசி முடிவு செய்யாமல் அரசியல் கூட்டணி என்று எப்படி அறிவிக்கலாம் என்று கடந்த 7–ந்தேதி வைகோவிடம் கேட்டேன். அவரும் தவறுதான் என்று ஒத்துக் கொண்டார்.அப்போது திருவாரூரில் அடுத்த மாதம் 5–ந்தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.நாங்கள் 5 கட்சி கூட்டணியை அரசியல் கூட்டணியாக பார்க்க வில்லை. யாருடன் கூட்டணி என்பது தேர்தல் நெருங்கும் போதுதான் முடிவு செய்யப்படும்.பாரதீய ஜனதாவை தவிர வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி சேருவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக