Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 25 மே, 2015

"11ம் வகுப்பில் அரசுத் தேர்வு வேண்டும்"

"11ம் வகுப்பில் அரசுத் தேர்வு வேண்டும்" 

நடந்து முடிந்துள்ள +2 மற்றும் 10 ம் வகுப்புத் தேர்வுகளில் ஏராளமான மாணவர்கள் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளனர். 200க்கு 200, 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகமாக உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்திய அளவில் IIT சேர்க்கைக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வான JEE ல் தமிழ்நாடு 14 வது இடத்தில்தான் உள்ளது. 2014 ம் ஆண்டில் வெற்றி பெற்ற ஆந்திர மாணவர்களின் எண்ணிக்கை 21,818. ஆனால் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கையோ வெறும் 3974. அதேபோல அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் தமிழக மாணவர்கள் மேற்படிப்புகளில் முதலாம் ஆண்டில் அதிகம் தோற்கவும் செய்கின்றனர்.
தமிழகப் பள்ளிகள் தமது மாணவர்கள் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்பதற்காக 9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைச் சொல்லித் தராததே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக உள்ளது. போட்டித் தேர்வுகள் மட்டுமின்றி இப்படி அடிப்படை பலவீனமாக உருவாக்கப்படும் மாணவர்கள் ஒரு சிறந்த அறிவியலாளராக உருவாவதற்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. இதைத் தடுக்க ஒரே வழி 11ம் வகுப்பிலும் அரசுத் தேர்வு நடத்துவதுதான். அண்டை மாநிலங்களில் அப்படித்தான் நடை பெறுகிறது.
இதனை விளக்கி அக்கறையுள்ள கல்வியாளர்கள் உருவாக்கியுள்ள விரிவான அறிக்கை கீழ்க்கண்டவாறு வெளியிடப் படுகிறது.

இடம் : பிரஸ் கிளப், சேப்பாக்கம், சென்னை- 05
தேதி : 26 - 05 - 2015, செவ்வாய், மாலை 3 மணி

பங்கு பெறுவோர்: பேரா. பிரபா. கல்விமணி. முனைவர் ப. சிவகுமார், முனைவர் சற்குணம் ஸ்டீபன், கோ. சுகுமாரன், பேரா. அ.மார்க்ஸ், பேரா. மு..திருமாவளவன், வீ.சீனிவாசன், ஆசிரியர் மு.சிவகுருநாதன், ஆசிரியர் முனைவர் ஜெ. கங்காதரன்,
அவசியம் வந்திருந்து தங்கள் இதழில் இந்த முக்கிய செய்தியை வெளியிட வேண்டுகிறோம்.
தொடர்பு : அ.மார்க்ஸ்,
 3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,சென்னை -20.
 செல்: 94441 20582.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக