தங்கள் தலைவன் மீது ஏவப்பட்ட விமர்சனங்களை திசை திருப்ப வரம்பு மீறி பேசப் பட்ட பேச்சை கண்டிக்கிறோம் என்ற பெயரில் யார் பின்னால் இந்த சமுகம் அணி திரள்கிறது. சமூகத்தை நிரந்தர நரகத்தின் பால்
அழைக்கும் பரேல்விகள் பின்னாலா ? ரவுடியிசத்தை, கட்டப் பஞ்சாயத்தை முழு நேர தொழிலாக வைத்துக் கொண்டு சுன்னத் ஜமாத் போர்வையில் இருக்கும் தறுதலைகள் பின்னாலா ? அந்த மேடையில் பேசிய ஒருவருக்காவது சுன்னத் ஜமாத் கொள்கை என்றால் என்னவென்று தெரியுமா ? சமூகத்தை பாதிக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க இந்த இரு கூட்டத்தாரும் பொது சமூகத்தின் மத்தியில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவு படுத்தி கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உங்கள் பிரச்சனைகளை உள்ளரங்கில் வைத்துக் கொண்டு பொறுப்புணர்ந்து செயல்படுங்கள். பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் உங்கள் பின்னால் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக