கத்தார் லப்பைக்குடிக்காடு மக்களின் நமதூர் மக்கள் (குடும்பம்)- சந்திப்பு நிகழ்ச்சி
கத்தாரில் நேற்று (01.05.2015) பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு மக்களின் நமதூர் மக்கள் (குடும்பம்) - சந்திப்பு நிகழ்ச்சி கத்தார் அஸ்பைர் பார்க்கில் மதியம் 2.00 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 8 குடும்பத்தினர்கள் உட்பட 37 பேர் கலந்துக் கொண்டனர்.
இந்த நமதூர் குடும்பம் நிகழ்ச்சியினை ரியாஸ் மற்றும் அபுபக்கர் ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தனர். ரியாஸ் அவர்களிடம் இந்த நமதூர் குடும்பம் நிகழ்வினை பற்றி கேட்டபோது ’வெளிநாட்டில் வேலைக்காக வந்திருக்கும் நமக்கு நமதூர் மக்களை சந்திக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரிவதில்லை இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் ஒருவருக்கொருவர் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும் என்று கூறினார். இது மாதிரியான நிகழ்ச்சிகளால் வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மற்றும் ஊர் மக்களை காணும் வாய்ப்பாகவும் அமையும்’ என்பதாக கூறினார்.
அபுபக்கர் அவர்களிடம் கேட்ட போது ’பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் இந்த காலகட்டத்தில் இதுபோல சந்திப்பதென்பது பெரிய விசயம், அப்படி இருந்தும் நமது அழைப்பை ஏற்று நமதூர் மக்கள் கலந்துக்கொண்டதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடந்த வருடம் ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சியை நமதூர் மக்களை கொண்டு செய்திருந்தோம். இந்த வருடம் முதல்முறையாக நமதூர் குடும்பம் நிகழ்ச்சியை துவக்கியுள்ளோம். முதல்தடவை என்பதால் பெரிய அளவில் ஏதும் செய்ய முடியவில்லை. இனி வரும் வருடங்களில் இன்னும் சிறப்பாக செய்ய நாடியுள்ளோம்’ என்று கூறினார்.
வந்திருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாக இருந்தாலும் வந்திருந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்த சந்தேஷத்தில் ஊர் விசயங்களையும், தங்களது வேலைகளைப்பற்றியும் பேசிமகிழ்ந்தனர். பெண்களும் ஒன்றாக அமர்ந்து தங்களது குடும்ப விசயங்களை பகிர்ந்துக் கொண்டனர். குழந்தைகள் விளையாட பெரிய இடம் கிடைத்ததால் சந்தேஷமாக விளையாடினர். வந்திருந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மீரான் அவர்களிடம் இந்த நிகழ்ச்சியைபற்றி கேட்டபோது ’கத்தாரில் நமதூரார்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை எங்களுக்கு தெரிந்தவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று இத்தனை பேர் வந்துள்ளனர். இந்த வருடம் நடந்ததை பார்த்து அடுத்தடுத்த வருடம் இன்னும் அதிகமாக நமதூர் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்’ என்று கூறினார்.
வெளிநாட்டில் தமிழ் மக்களை ஒன்றாக பார்த்தாலே சந்தோஷமாக இருக்கும். அதுவும் உள்ளுர் மக்களையும் உறவினர்களையும் ஒன்றாக பார்த்தால் கூடுதல் சந்தோஷம்தான். அந்த சந்தோஷத்துடன் இனி எப்போது இதுபோல கூடுவோம் என்ற எதிர்பார்ப்புடன் மாலை அனைவரும் பிரிந்து சென்றனர்.
கடல் கடந்து கத்தாரில் வாழும் நமதூர் மக்களின் நமதூர் குடும்பம் நிகழ்ச்சி இனி வரும் வருடங்களிலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறது.
மின்னஞ்சல் மூலமாக
Mohamed Meeran
jameel riaz
Riaz Ahamed
Many thanks to LBK news team to post this event.
பதிலளிநீக்கு