விஜயவாடா: மகாத்மா காந்தியின் உருவப்படம் இல்லாத 10 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் தற்போது இடம் பெற்றுள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2ல் க்ளீன் இந்தியா என்ற திட்டத்தை துவக்கி விடுமுறையை நீக்கிய பாஜக அரசு, தற்போது ரூபாய் நோட்டிலிருந்தும் அவரை நீக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ஐதராபாத் ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் கோவிந்தராவ் கூறுகையில், “இந்த நோட்டு விவகாரம் குறித்து மத்திய அலுவலகம் தான் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
இதனிடையே ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த வியாபாரி வெங்கடேஸ்வர ராவ் விஜயவாடாவில் உள்ள ஒரு பொருட்காட்சியில் 10 ரூபாய் நோட்டை ஒரு கடையில் பெற்ற போது அதில் காந்தி உருவப்படம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.
அது கள்ள நோட்டாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு உடனே அருகில் உள்ள ஸ்டேட் வங்கியை அணுகினார். வங்கி அதிகாரி அந்த நோட்டை சோதனையிட்ட போது அது உண்மையான நோட்டுதான் என உறுதி செய்தார்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ரிசர்வ் வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “10 ரூபாய் நோட்டில் முதன் முதலாக காந்தி உருவப்படம் ஜூன் 1996-ம் ஆண்டுதான் இடம் பெற்றது. காந்தி உருவப்படம் இல்லாத இந்த நோட்டு அதற்கு முந்தைய காலத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம்” என்றார்.
இந்த 10 ரூபாய் நோட்டு 1996-க்கு முன்னதாக அச்சடிக்கப்பட்டதா? அல்லது சமீபத்தில் வெளியிடப்பட்டதா? என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2 ல் க்ளீன் இந்தியா என்ற திட்டத்தை துவக்கி விடுமுறையை நீக்கிய பாஜக அரசு, தற்போது ரூபாய் நோட்டிலிருந்தும் அவரை நீக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக