புதுடெல்லி: மாட்டிறைச்சியை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் பாகிஸ்தானுக்கோ இதர நாடுகளுக்கோ செல்லலாம் என்று
மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு பதிலடியாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.
தனது ஃபேஸ்புக் போஸ்டில் இதுக்குறித்து கட்ஜு கூறியிருப்பது:
நான் ஒரு இந்து.மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்.மீண்டும் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்.மாட்டிறைச்சியை சாப்பிடுவதில் என்ன தவறு உள்ளது?உலகில் 90 சதவீதம் பேரும் மாட்டிறைச்சியை சாப்பிடுகின்றனர்.அவர்களெல்லாம் பாவிகளா?பசு நமது புனித மாதா என்பதை நான் நம்பவில்லை.ஒரு மிருகம் எவ்வாறு மனிதனின் மாதாவாக(தாயாக) ஆக முடியும்?ஆகையால்தான் 90 சதவீத இந்தியர்களும் முட்டாள்கள் என்று கூறப்படுகிறது.அதில் முக்தார் அப்பாஸ் நக்வியும் அடங்குவார் என்று கட்ஜு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக