Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 6 மே, 2015

+ 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு ...


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகளை இணையதளம் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in,www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் பெற மொழி பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறு கூட்டல் செய்வதற்கு மொழி பாடங்களுக்கு தலா 305 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 14-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகிக்கப்பட உள்ளன. தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது.

இதற்காக வரும் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக