நபி (ஸல்) அவர்கள் முன் அறிவிப்பு செய்த செய்திகள் தற்போது சிலவற்றை நம்மால் உணர முடிகிறது .. அதில் ஒன்று தான் இந்த செய்தியும்...
ஒரு மனிதன் குர்ஆனை ஓதி அவனிடம் நல்ல மாற்றம் தென்பட்டு அவன் இஸ்லாமிற்க்கு உதவி செய்யக் கூடியவனாக ஆகிறான். அதன்பின் அவன் இஸ்லாமிலிருந்து விலகிச் சென்று, அதை தன் முதுகிற்கு பின் எறிந்து விடுகிறான். அவன் தன் அண்டை வீட்டுக்காரரை முஷ்ரிக் என்று குற்றம் சாட்டி அவர் மீது வாளால் தாக்குதல் தொடுக்கிறான். உங்கள் விசயத்தில் இவனைக்குறித்தே நான் மிகவும் அஞ்சுகிறேன் என இறைதூதர் (ஸல்) கூறினார்கள்.
இறைத்தூதரே ! அவ்விருவரில் யார் இணைவைப்பிற்கு தகுதியானவராக இருப்பார் ?
குற்றம் சுமத்தியவரா...?
குற்றம் சுமத்தப்பட்டவரா..?
எனநான் கேட்டேன். இல்லை குற்றம் சுமத்தியவரே என அவர்கள் பதிலளித்தார்கள்.
சஹீஹ் இப்னி ஹிப்பான் 81
அல்லாஹு அக்பர் ...
நீங்கள் இந்த செய்தியை உங்கள் உள்ளதால் உணர்ந்தால்... மனதார அல்லாஹ் அக்பர் என்று சொல்லுங்க ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக