பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.
பிறமொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 500 பெற்று 5 மாணவர்கள் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக இருந்தது.
கணிதப் பாடத்தில் 27,134 பேர் முழு100-க்கு 100 பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடத்தில் 1,15,853 பேர் 100-க்கு 100 பெற்றனர்.
சமூக அறிவியலில் 51,629 பேர் 100-க்கு 100 பேர் பெற்றுள்ளனர்.
தமிழில் 586 பேர் 100-க்கு 100 பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 644 பேர் 100-க்கு 100 பெற்றுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. மே 22 முதல் 27-ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு தாள்கள் (மொழிப்பாடம், ஆங்கிலம்) கொண்ட பாடத்துக்கு கட்டணம் ரூ.305, ஒரு தாள் கொண்ட பாடத்துக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ரூ.205.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது ஒப்புகைச்சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத் தித்தான் மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும். பள்ளி தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 29 முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஒரு அன்பான வேண்டுகோல் நமதூரில்கடந்த வெள்ளிக்கிழமை புதிய நிர்வாகம் தேர்ந்து எடுக்கப்பட்டது அதைப்பற்றி நமதூர் செய்தியில் ஒன்றும் போடவில்லை (நீங்கள் போடமாட்டீர்) அதனால் நமதூர் செய்தி பெயரை மாற்றி இன்று முதல் TNTJ NEWS என்று பெயர் மாற்றம் செய்வீர்கள் என்று நம்பும் லப்பைகுடிகாட்டான்
பதிலளிநீக்கு