Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 11 மே, 2015

ஜன நாயகம் வென்றது ....


போலி என்கவுண்டர்கள் மூலம் பயங்கரமான படுகொலைகளை
நிகழ்த்தியவர்கள் விடுதலையாகும்போது, அதனை வழி நடத்தியவர் ஒரு தேசிய கட்சியின் தலைவராக மாறியபோது, மும்பையில் கலவரத்தை தூண்டி ஆயிரக்கணக்கானோரை கொலைச் செய்ய காரணமாக இருந்த குற்றவாளி இறந்தபோது அவரது உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டபோது, இந்திய வரலாறு காணாத குஜராத் இனப்படுகொலைகளுக்கு தலைமை ஏற்றவர் இந்தியாவின் பிரதமராக மாறியபோது சாதாரணமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பொது மனசாட்சி, ஊழல் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு, தண்டனை ரத்துச் செய்யப்பட்ட தீர்ப்பையும் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளும்!அவ்வாறுதானே நாம் பழகிக்கொண்டோம்!

1 கருத்து:

  1. அல்லாஹ் வகுத்து தந்த சட்டத்தினாலும், அல்லாஹ்வை அஞ்சக்கூடிய உள்ளம் படைத்த மனிதனாலும்தான் நீதி பிறழாமல் வழங்கப்படும்.

    நீதீக்கான சான்று இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம்.

    அநீதிக்கான சான்று யூதர்கள் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய முஷ்ரிக்கீன்களிடத்திலும் இருக்கின்றது என்பதற்கான இன்னொரு சான்றாக ஜெயலலிதா தீர்ப்பு அமைந்திருக்கின்றது.

    ஜெயலலிதாவின் வரம்பு மீறல் சாதரண குடிமகனுக்கு தெரியும், ஏனோ நீதிபதிக்கு தெரியவில்லை.

    19 ஆண்டுகள் விசாரித்து குற்றவாளி என்று கீழ்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    ஆனால் உயர் நீதிமன்றம் சில மாதங்களில் 900 பக்கத்திற்கு காரணங்கள் எழுதி நிரபராதி என்கின்றது.

    பாவிகளிடத்தில் அதிகாரத்தையும் கொடுத்து விட்டு, வேடிக்கை பார்கின்றது ஃகைர உம்மத்.

    இடஒதுக்கீடு கேட்டு பின்னால் ஒடுகின்றது.

    நபிகளாரின் அடக்கத்தலத்திற்கு மேலுள்ள டூம்தான் இன்றைய உம்மத்தின் தலையாய பிரச்சினையாகிவிட்டது.

    இனி நீதி செலுத்தப்பட்டால் என்ன, அநீதம் ஓங்கினால் நமக்கென்ன?

    இன்னொருமுறை நமக்குள் அடித்து கொள்வதற்கு வேறொரு பிரச்சினை கிடைக்காமலா போய்விடும்??

    பதிலளிநீக்கு