Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 5 மே, 2015

ஒரு வரலாற்று கடமை – தொடர் 3


நீங்களும் பாபா சாஹிப் தான்.. 
தன்மானம்,தன்னறிவு, தன்னடக்கம்,ஆகிய மூன்றும் வாழ்கைக்கு  மிக சிறந்த ஆற்றல் அளிக்க கூடியவை
- அம்பேத்கர்

சமூக நீதி குறித்து இன்று அறிவுஜீவிகளும் அரசாங்கமும் சேர்ந்து பட்டிமன்றம் நடத்தி கொண்டிருகின்றன,சமூக நீதிக்கான வரைவிலக்கணங்களாக,ஒருவன் பொருளாதார ரீதியாக வலிமை பெற்று விட்டால் அவனது சமூக வாழ்வு மேன்மை அடைந்து விட்டது என்று ஒரு சாராரும், இல்லை கல்வியறிவு பெற்றுவிட்டால் ஒருவனின் சமூக  வாழ்வு மேன்மையடைகிறது என்று மற்றொரு சாராரும்  சர்வதேசிய அளவுகோலை வைத்து விவாதித்து கொண்டிருக்கையிலேயே இந்தியாவின் இயல்பை மறந்து விடுகின்றனர்.
சமூக நீதி குறித்தான  மதிப்பீடுகளுக்கு அம்பேத்கரின் வாழ்வே போதுமான ஆதாரமாகும், ஒருவன் பொருளாதார மேம்பாடும், கல்வி அறிவில் தன்நிறைவு அடைந்து விட்டாலும் பொது சமூகத்தில்  இருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையிலேயே அடிமைப்படுத பட்டு புரகனிக்கப்பட காரணமான சாதிய கட்டமைப்பையும் அதை தங்கி நிற்கும் இந்து மதத்தையும் தகர்த்து எரியாமல் ஒருவன் சமூக நீதியை பெற்றுவிட முடியாது,
ஆம் கல்விகற்க பள்ளிசென்றவுடனேயே நேரடியாக  சாதிய தாக்குதலை பொது சமூகத்தில் இருந்து அம்பேத்கர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

ஏனைய பிள்ளைகளை போல் சமமாக அமர வாய்ப்பு மறுக்கப்பட்டு வகுப்பறைக்கு வெளியே கோணிப்பை  விரித்து அமரவைக்க்கப்பட்டார். பள்ளிகூடத்தில், பொது குவளையில் நீரருந்த தடை, நீர் தேவைபட்டால் பள்ளிக்கூடத்தின் ப்யூன் நீரினை அள்ளி மேலிருந்து கீழ் ஊற்றுவார், கைகளில் பிடித்து குடித்து கொள்ளலாம், பியுனும் இல்லை எனில் அன்று நீர் கிடைக்காது ஒரே பள்ளி, ஒரே வகுப்பறை, ஒரே கட்டணம் செலுத்திய போதும் உயர் சாதி மாணவர்களை கவனிக்கும் ஆசிரியர்கள் தாழ்ந்த சாதி மாணவனை கவனிக்க மாட்டார்கள் அனால் அம்பேத்கர் இவைகளை எல்லாம் கவனித்தார் பின்னாளில் ‘ பியூனும் நீரும்’ என்று கட்டுரை  எழுதும் அளவிற்கு கவனித்தார். புரச்சூழலால் அதீதமான முறையில் நெருக்கடிக்கு  உள்ளான ஒரு இராணுவ அதிகாரியின்  மகனுக்குள் பாபசாஹிப் துளிர் விட்ட தருணம் இது தான்.
அம்பேத்கர் என்று பள்ளியின் பதிவேட்டில் ராம்ஜி சக்பால் என்று பதிந்திருந்தார் அனால் பள்ளி பாபா சாஹிபை உருவாக்கி கொண்டிருந்தது.
இன்று அநேகம் பேர் இது போன்று அனுதினமும் வன்கொடுமைகளுக்கு ஆளாகி கொண்டிருகின்றோம்  ஆனால் எத்தனை பாபாசாஹிபுகள் தோன்றினார்கள் என்ற கேள்வி எழுகிறது.
அம்பேத்கர் வளர வளர அவரின் கல்வியறிவும் வளர்த்தது, கூடவே வன்கொடுமைகளும் வளர்த்தது. இந்த வன்கொடுமைகளுக்கு தீர்வுகட்ட  அம்பேத்கர் மனதில் பாபபாசாஹிபும்  வளர்த்தார்.

ஆம் பாபசாஹிப் என்பது ஒரு உருவக பெயர் மக்கள் உணர்வு பொங்க சூட்டிய பெயர்.
தன்னறிவாள் தன்மானம் மிகைத்து அந்த தன்மானம் தன் இனமானம் காக்க நீங்கள் தரணியில் பவனி வந்தால் நீங்களும் பாபாசாஹிப்தான்…. 
தொடரும்…..
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக