Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 11 மே, 2015

இன்று அன்னையர் தினம்! – அப்துர் ரஸ்ஸாக்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல் குர்ஆன் 31:14)
கர்ப்ப காலத்தில் ஒரே மாதிரியான துன்பத்தை ஒரு தாய் அனுபவிப்பதில்லை. மாறாக, பல மாதிரியான துன்பங்களை அனுபவிப்பார்.

  • ஊண், உறக்கத்தை இழப்பார்.
  • அதிகமான  மயக்கத்திற்குள்ளாவார்.
  • பிரசவிக்கும்போது கடுமையான வலியால் துடிப்பார்.
  • இத்துடன் நாம் இந்த உலகிலிருந்து விடை பெறப் போகிறோம் எனும் அளவுக்கு வேதனையை  உணருவார்.
  •  மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்புவார். (இதில் பல தாய்மார்கள் திரும்பாமலும் சென்றிருக்கின்றனர்.)
ஒரு மனிதர், நாதர் நபி [ஸல்] அவர்களிடம் வந்து, “நான் நல்லுறவு கொண்டாட மிகவும் உரிமையுடையவர் யார்?” என மூன்றுமுறை வினவியபோதும், “உன் அன்னை” என்று பதிலளித்தார்கள் அண்ணலார்.
ஆம்! தாயன்புக்கு நிகராக வேறெதுவும் இல்லை.
இத்தகு சிறப்பு வாய்ந்த தாயை மேன்மைப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன், 1914ம் ஆண்டு வருடந்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அதிகாரப்பூர்வமான அன்னையர் தினமாக அறிவித்தார்.
ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை 46 நாடுகளில் “அன்னையர் தினம்” கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க அன்னையை இன்று பல இல்லங்களில் முதுமையடைந்த நிலையில், பெற்ற செல்வங்களே பெருஞ்சுமையாகக் கருதி, வசைபாடி வெளியேற்றுவதும், ‘தொலைந்து போ’ எனத் திட்டுவதும், முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு கவனிக்காமல் இருப்பதும் சீர்கெட்ட ஒழுங்குமுறைகளாகி விட்டன.
இதனை தாயினும் மேலான கருணையாளனான இறைவன் முற்றிலும் வெறுக்கிறான். தாயிடம் பணம் கேட்டு வருத்தி குடி,  கூத்துகளில், வீண் ஆடம்பரங்களில் தாயின் பணத்தையும், சொத்தையும் வற்புறுத்தி  பெற்றுக் கொள்ளும் கயவர்கள் அதிகரித்து வருகின்றனர். தராவிட்டால் கொலை செய்து அபகரிப்பவர்களும் உள்ளனர்.
இவ்வாறு கேட்பதை இறைவன்  தடுத்துள்ளான். தாய் வசதியற்ற  நிலையில் இருந்தால், அவளது உயிர் ஆதாரமாய் விளங்கும் உண்டிக்கும், உடைக்கும், உறைவிடத்திற்கும் தான் பெற்ற சீராக, நேராக வளர்த்த பிள்ளைகளிடம் தானே கேட்க முடியும்.
அன்னையர் தினத்தில் நம்மைப் பெற்ற தாயை மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்துத் தாய்மார்களையும் மதித்து, மகிழ்வித்து கவுரவிக்க வேன்டும். இந்த ஒரு நாளில் மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் அன்னையரை மதித்து ஒழுக வேன்டும் என்பதே இந்த அன்னையர் தினச் சிந்தனையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக