சமீபத்தில் நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பங்கத்தின் பாதிப்பு அடங்குவதற்குள் நம்முடைய அரசியல்வாதிகள் அடித்த கூத்துகள் ஏராளம் இதை தூதுவின் முந்தைய கட்டுரைகளின் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்
இந்நிலையில் நேற்றும் இன்றும் நேபாளத்தில் பெரும்பாலான சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் ஒரு #ஹாஸ்டாக் பயன்படுத்தி ஒட்டுமொத்த இந்திய மீடியாவையும் கடுமையாக விமர்சித்தனர்.
#GoHomeIndianMedia என்று யாரோ துவக்கி வைத்த இந்த ஒற்றுமை குறியீடு இன்று மதியத்திற்குள் நேபாளத்தில் அதிக மக்கள் பயன்படுத்திய ஒன்றாக பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டது , ட்விட்டரிலும் தொடர்ச்சியான பதிவுகள் வெளிப்பட்டன.
இது மத்திய பிஜேபி அரசிற்க்கு ஏற்பட்ட பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது
ஏனெனில் NDRF – National Disaster Relief Force என்ற படையை இந்திய அரசு அனுப்புகிறது என்று சொன்ன போதே கூடவே 200 ஊடக நிருபர்களும் போவார்கள் என்று அரசு சொன்னது. ஆக அரசின் சார்பில் போன ஊடகங்கள் தான் இவை என்பதால் மத்திய அரசுக்கு இவ்விஷயத்தில் கூடுதல் சங்கடம் ஏற்பட்டுள்ளது
மேலும் கடந்த சில நாட்களாக இந்திய ஊடகங்கள் பாகிஸ்தான் அனுப்பிய நிவாரண பொருட்கள் விவகாரத்தில் நடந்து கொண்ட விதம் உலக நாடுகள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக