அமெரிக்க: ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் நிறுவனம் தர வேண்டிய 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற வடிவமைப்புகள் சிலவற்றை சாம்சங் நிறுவனம் முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2012ம் ஆண்டு சாம்சங் நிறுவனம் ஆப்பிளுக்கு 5 ஆயிரத்து 600 கோடி இழப்பீடு தர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சாம்சங்கின் முறையீட்டை ஏற்று வாஷிங்டன் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆப்பிளின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புகள் சிலவற்றை சாம்சங் முறைகேடாக பயன்படுத்தியது என்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதே சமயம் சில வடிவமைப்புகள் குறித்த ஆப்பிளின் புகாரை நிராகரித்தது.
இத்தீர்ப்பு மூலம் தங்கள் தரப்பில் நியாயம் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் முழுமையான நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டத்தை தொடரப் போவதாகவும் சாம்சங் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக