காவல் துறையின் அராஜகம் மற்றும் மனித உரிமை மீறல்
சம்பவம்-- 1
இராமநாதபுரம் புரம் மாவட்டம் அழகன்குளத்தில் நாள் 04.05.2015
அன்று அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் கலந்து கொண்ட சமுக விரோதிகள் சிலரால் தனியார் நிருவனத்தால் நடத்தப்படும் நிஜாம் பஸ் அழகன்குளத்தில் இருக்கும் போது தாக்கப்படுகிறது மேலும் அந்த பஸ்ஸில் இருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கடுமையான முறையில் தாக்கபடுகிறார்கள் இதை அறிந்த அந்த நிஜாம் பஸ் மேனஜர் வந்து சம்பவ இடத்தை பார்வை இடுகிறார் அந்த நேரத்தில் அதே சமூக விரோதிகளால் மேனேஜரும் பாதிக்க படுகிறார் ..
அந்த நேரத்தில் ஆற்றங்கரையே சேர்ந்த சமூக விரோதிகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அந்த பஸை தாக்குவோம் என்று மிரட்டல் விடுகிறார்கள் அந்த நேரத்தில் அந்த பஸ்ஸின் குருப்பை சேர்ந்தவர்களும் கைகலப்பு ஏற்படுகிறது ......
அந்த நேரத்தில் பிரச்சனை நடக்கிறது என்று நமது முஸ்லிம் சகோதரர்கள் இளைஞர்களுக்கு தெரிய வர அந்த பாதிக்கப்பட்ட பஸ்ஸில் ஆற்றங்கரையே சேர்ந்தவர்கள் பஸ்ஸில் இருக்கிறார்களா என்று பார்ப்பதற்கு அங்கு செல்கிறார்கள்.சிலர் அங்கு இருந்தை பார்த்து நமது சகோதரர்கள் ஆட்டோவில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர் அதன் பிறகு அந்த நடந்த சம்பவத்திற்கு காவல் துறையால் வழக்கு பதியப்பட்டது.
சம்பவம் 2
---------
ஆற்றங்கரையே சேர்ந்த சமுக விரோதிகள் அவர்கள் அடிவாங்கியதற்கு பழி வாங்க நமது முஸ்லிம் இளைஞர்களை ஐந்து பேர் மீது காவல்துறை மீது பொய்யான வழக்கு கொடுக்கப்பட்டது இதனால் அந்த சகோதரர்கள் ஊரில் இல்லாமல் தலைமறைவாகி விட்டனர்
சம்பவம் 3
ஆற்றங்கரையில் முஸ்லிம் ஜூம்மா பள்ளியின் தலைவராக இருக்ககூடிய சவுக்கர் ( எனது மனைவியின் தந்தை ) 65 வயது மதிக்கதக்கவர் நபரை கேணிக்கரை சரக dsp. அண்ணாமலை அகர்வால் தலைமையிலான 20 பேருக்கும் மேற்பட்ட காவலர்கள் நள்ளிரவில் ஒரு மணி அளவில் (08.05.2015) உறங்கி கொண்டிருந்தவரை வீட்டு கதவை உடைத்து அவரை சட்டை மற்றும் செருப்பு கூட போட விடாமல் வீட்டில் இருந்து கொலை கைதி போல இழுத்து செல்வதை கண்ட நான் எதற்கு என் மாமாவை இழுத்து செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு நீயும் வண்டியில் ஏறுடா மேலும் ஆபாச வார்த்தையால் திட்டி அவரையும் என்னையும் போலிஸ் வண்டியில் சட்டையே பிடித்து ஏற்றிக்கொண்டு போய், விடியும் வரை கேணிக்கரை காவல் நிலையத்தில் இருட்டறையில் பூட்டி வைத்தனர் அங்கு அந்த இரண்டு பேருக்கும் அடிப்படை உரிமைகள் கூட விசாரணை என்ற பெயரில் மறுக்கப்பட்டது.
விடிந்த பின் 08.05.2015 காலை 6.30 மணியளவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை உயர்நீதிமன்றம் வக்கீல் அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டனர் இந்த பிரச்சனையில் தமுமுக நிர்வாகிகள் மறுமலர்ச்சி தமுமுக மற்றும் பாப்புலர் ப்ரண்ட் நிர்வாகிகள் காவல் நிலையம் சென்று இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்
வழக்கே இல்லாத எங்கள் இருவர் மீதும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் இந்த கொடுமைகள் நடந்துள்ளது .
இனிமேல் இந்த மாதிரி சட்ட விரோத காவல் ஆற்றங்கரையில் நடக்கக்கூடாது என்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சட்டக்குழு தீவிரமாக அந்த காவல் துறையினர் மேல் நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது வருகிறார்கள ....
எங்கள் கைதை கேள்வி பட்ட சகோதர இயக்கங்கள் களம் இறங்கியது மட்டற்ற மகிழ்ச்சியே ஏற்படுத்தியது
தமுமுக சகோதரர்கள், பாப்புலர் ப்ரண்டும் மற்றும் மறுமலர்ச்சி தமுமுக நிர்வாகிகள் அனைவருக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கருனை புரிவனாக.
Thanks Face Book
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக