நாக்பூர் : நாக்பூரில் நடைபெற்ற நீர்ப்பாசன முறைகள் பற்றிய கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். இந்தியாவில்
உள்ள சாலைகள் குறித்தும், நீர் பாசனம் குறித்து அவர் பேசுவார் என அதிகாரிகளும், கூட்டத்திற்கு வந்தவர்களும் காத்து இருந்தனர். ஆனால், பலரும் எதிர்பாரத வகையில், பேசி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
சிறுநீர் ஊற்றி வளர்க்கப்படும் செடிகள் மிகவும் நன்றாக செழித்து வளரும்.”
“நான் சொல்வது உண்மை. இதை நான் சொந்த அனுபவத்தில் கண்டுபிடித்துள்ளேன்.”
“டெல்லியில் உள்ள எனது பங்களாவில் இருக்கும் செடிகள் மற்றும் மரங்களுக்கு தண்ணீருக்கு பதிலாக என்னுடைய சிறுநீரை ஊற்றி வளர்க்கிறேன். சிறுநீர் ஊற்றப்படும் செடிகளும், மரங்களும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதை விட வேகமாக வளர்கின்றன.
”“உங்களது சிறுநீரை சேமியுங்கள். அதை ஆரஞ்சு பழ செடிக்கு ஊற்றி வளர்த்தால் ஆரஞ்சு பழங்கள் நல்ல சத்துள்ளதாக இருக்கும். இதை நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்தினால்தான் உணர முடியும்”
வறட்சியை சமாளிக்கும் விதமாக நீர்ப்பாசன முறைகள்! என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்படி பேசியவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.ஆண் குழந்தை பிறக்க ஆயுர்வேத மருந்தையும், செடி வளர சிறுநீரையும் பரிந்துரை செய்யும் பாஜக ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ ?
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக