அயோத்தி: உச்ச நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால், அயோத்தில் அரசியல் ஆதரவு இன்றி ராமர் கோவில் கட்டுவோம் என்று சங்கராச்சார்யா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில், அயோத்தியில் விசுவ இந்து பரிசத் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “டெல்லி மேல்-சபையில் பாஜக வுக்கு பெரும்பான்மை பலம் இல்லை.
எனவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தில் தற்போது தீர்மானம் கொண்டு வர முடியாது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால், அயோத்தில் அரசியல் ஆதரவு இன்றி ராமர் கோவில் கட்டுவோம் என்று இந்து மதத்தலைவர் சங்கராச்சார்யா தெரிவித்துள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக