Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 12 மே, 2015

ஜெயாவிடம் துண்டு போட்டு வைக்கும் மமக!

ஜெயாவிடம் துண்டு போட்டு வைக்கும் மமக!

"செல்வி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் நிரபராதிகள் என்று நீதியரசர் குமாரசாமி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். 
ஜனநாயக நாட்டில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது தான் சரியான மரபு. அந்த அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சி இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறது.
விரைவில் மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்.

--------அவரவர் அரசியல் ஆதாயத்துக்காக ஒரு குறிப்பிட்ட தீர்ப்பை வரவேற்ப்பதும் வெறுப்பதும் அறிக்கை விடுவதும் என்பது அரசியலில் சகஜம்.
அரசியலில் சுயநலம் இருக்கலாம் ஆனால் சுயநலமே அரசியலாக இருக்கலாமா? ஒரு இஸ்லாமியன் இப்படி அரசியல் செய்யலாமா?
வயதிலும் மூத்த, அரசியலிலும் மூத்த, அனுபவத்திலும் மூத்த, அறிவிலும் மூத்த, கலைஞர் கருணாநிதிக்கே அரசியல் பாடம் சொல்லிக் கொடுக்கும் போல மமக கட்ச்சி.
கொள்ளைக்காரி, ஜெயாவின் விடுதலையியை நியாயப் படுத்தி அரசியல் ஆதாயம் அடைந்து விட்டு போகட்டும்.
இவர்கள் ஆதாயம் அடைய சமூதாயம் பலிகடா ஆகவேண்டுமா?
"ஜனநாயக நாட்டில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது தான் சரியான மரபு" என்று கூறும் அன்சாரி அவர்களே!
உரியவனுக்கு ஒரு பங்கு! உடைத்தவனுக்கு இரு பங்கு! இந்த தீர்ப்பும் நீதி மன்றத்தால் நீங்கள் கூறும் இதே ஜனநாய நாட்டில் தான் பாபர் பள்ளி விடயத்தில் வழங்கப்பட்டது.இதை ஏற்றுக் கொள்வதும் உங்கள் மரபு என்றால் இந்த தீர்ப்பை எதிர்த்து களம் கண்டது ஏன்? மக்களை ஏமாற்றவா?
குஜாரத்தில் இரண்டாயிரம் முஸ்லீம்களை கொன்று குவித்த மரணவியாபாரி மோடி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதும் நீங்கள் கூறும் இதே ஜனநாய நாட்டில் தான் .இதை ஏற்றுக் கொள்வதும் உங்கள் ஜனநாயக மரபா?
இஸ்ரத் ஜஹான் போலி எண்கவுன்டர் வழக்கிலிருந்து அமித்ஷா என்ற அயோக்கியன் நீதிமற்றத்தால் விடுதலையானதும் நீங்கள் கூறும் இதே ஜனநாய நாட்டில் தான்.இதை ஏற்றுக் கொள்வதும் உங்கள் ஜனநாய மரபா?
கூட்டு மனசாட்ச்சி என்ற அடிப்படையில் மனசாட்சியே இல்லாமல் என் சகோதரன் அப்ஸல் குரு, நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டதும் நீங்கள் கூறும் இதே ஜனநாயக நாட்டில் தான்.இதை ஏற்றுக் கொள்வதும் உங்கள் ஜனநாயக மரபா?
கேரளப் பழனி பாபா மதானி அவர்கள் இன்னும் வெளிவர முடியாமல் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றாறே இதற்க்கும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தானே காரணம் ? இதுவும் நீங்கள் கூறும் இதே ஜனநாய நாட்டில் தான்.இதை ஏற்றுக் கொள்வதும் உங்கள் ஜனநாயக மரபா?
தமிழகத்தில் அப்பாவி முஸ்லீம்கள் பல ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டு இருப்பதற்க்கு காரணம் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் தான் .இதுவும் நீங்கள் கூறும் இதே ஜனநாயக நாட்டில் தான்.இதை ஏற்றுக் கொள்வதும் உங்கள் ஜனநாயக மரபா?
நீங்கள் அடிக்கும் அரசியல் கூத்துகளுக்கு அளவே இல்லையா?
எலும்புத் துண்டுகளை அம்மா வீசும் முன்பே அதை பொறுக்க தாயராகி விட்ட உங்களை மக்களுக்கு அடையாளம் காட்டினால் என்ன தவறு?
இனி உங்களை ஒரு போதும் சமூதாயம் நம்பாது!

செய்தி முகநூலிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக