மே 31 சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்!
1987 முதல் ஆண்டு தோறும் மே 31ஐ உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டு தோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் இப்பொழுது வெளிவந்துள்ளது.
நம் நாட்டில், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புகையிலைக்கு அடிமையாகும் பெண்களுக்கு, பல்வேறு உடல் நல பாதிப்பு உள்ளிட்ட பல மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
புகை பிடித்தலின் தீமைகளும், அதை தவிர்க்கும் முறைகளும் நம் அனைவருக்கும் தெரிந்திருந்தும், இளைய தலைமுறையினருக்கு பல சந்தர்ப்பங்களில் நாம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.
ஒருசில ஊடகங்களின் மலிவான பிரச்சாரங்களை மீறி, நமக்கு சமூகத்தைக் காக்கும் கடமை உண்டு என்பதை உணர்ந்து, நாம் விழிப்புடன் செயல்படுதல் அவசியம்.
இன்றே புகைபிடிப்பதை விலக்குவோம். நோயின்றி பல்லாண்டு காலம் வாழ்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக