Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 3 மே, 2015

டாக்டர் சார், மெடிகல் ஆபீசர் சார், கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்...

டாக்டர் சார், மெடிகல் ஆபீசர் சார், கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்...


தமிழகத்தில் நேற்று மருத்துவர்கள், பருத்துவர்கள் என்றால் பட்டம் பெற்ற மருத்துவர்கள், முக்கியமாக அல்லோபதி டாக்டர்கள் தங்களுக்குப் பாதுகாப்பில்லை எனவும், பாதுகாப்பு வேண்டும் எனவும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

வன்முறைகள் நாளுக்குநாள் பெருகி வருகின்றன. தலித்கள், பெண்கள், இப்படிப் பலதரப்பினரும் பாதுகாப்பு இல்லை எனத் தேருவில் இறங்கி நியாயம் கோருகின்றனர். அந்த வகையில் இப்போது மருத்துவர்கள்.
சரி, யாரால் நம் மருத்துவர்களுக்கு ஆபத்து?
பெரிய பெரிய மல்டி நேஷனல் மருந்துக் கம்பெனிகள், தாங்கள் எவ்வளவுதான் இந்த மருத்துவர்களுக்குப் பரிசளித்தாலும் தங்கள் கம்பெனி மருந்தை எழுதித் தள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதற்காக ஆள் வைத்து அடிக்கிறார்களா?
சிசேரியன் உட்பட ஆபரேஷன்களைப் பரிந்துரைக்காமல் கூடியவரை இயற்கைப் பிரசவம் என்கிற ரீதியில் மருத்துவம் செய்து நோயாளிகளைக் குணப்படுத்தி அனுப்பி விடுகிறார்களே என்கிற ஆத்திரத்தில் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் இவர்களை மாஃபியாக்களை ஏவிக் காலி பண்ணுகிறார்களா?
இல்லை, காவல்துறை மற்றும் அரசின் விருப்பத்திற்கு எதிராக போலி என்கவுன்டர் முதலான பிரச்சினைகளில் மக்களுக்கு நியாயம் செய்யும் வகையில் உண்மைகளை எழுதுவதற்காக காவல்துறையினர் ஏதும் இவர்களைத் தாக்குகிறார்களா? பொய் வழக்குப் போடுகிறார்களா?
கார்பொரேட் மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்துவதால். மக்களுக்குச் சார்பாக இருக்கிறார்களே என்பதற்காக இப்படித் தாக்குதலா?
அரசாங்க மருத்துவ மனைகளில் போதிய மருந்துகள் இல்லை, வசதிகளில்லை என இவர்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதால் அரசாங்கம் இவர்களைப் பழி வாங்குகிறதா?
அப்படியெல்லாம் நடப்பதாகத் தெரியவில்லையே. பொதுமக்களிடம் இருந்தல்லவா இவர்களுக்கு ஆபத்தாமே...?
டாக்டர் சார், மெடிகல் ஆபீசர் சார்... என்ன பிரச்சினை உங்களுக்கு? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக