பாரிஸில் 12 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட அசம்பாவிதத்துக்கு எதிராக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கண்டனம் தெரிவித்தது தொடர்பாக வெளியான கருத்துப்படம் இது!
பாரிஸில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடந்த படுகொலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் நிகழ்த்தப்பட்டது. ஆனால், பலஸ்தீனில் இஸ்ரேலால் கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே 17 பத்திரிகையாளர்கள் வெளிப்படையாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனைக் குறித்து உலக ஊடகங்களோ நாடுகளோ வாயைத் திறக்காமல் அமைதி காக்கின்றன.
அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் நடத்தினால் அது படுகொலை; ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்த நாடு ஒன்று நிகழ்த்தினால் அதன் பெயர் கருணைகொலையோ?!
இஸ்ரேலால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பலஸ்தீனில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் விவரம்:
1. ஹமித் அப்துல்லாஹ் ஷிஹாப் – மீடியா24 நிறுவனம்(Media 24)
2. நஜ்லா மஹ்மூத் ஹஜ் – சுதந்திர செய்தியாளர்
3. காலித் ஹமத் – கொண்ட்னாவோ ஊடக தயாரிப்பு நிறுவனம் (The Kontnao Media Production company)
4. ஸியாத் அப்துல் ரஹ்மான் அபு ஹின் – அல் கெதப் செயற்கைகோள் அலைவரிசை(Al-Ketab satellite channel)
5. இஸ்ஸத் துஹைர் – சிறைவாசிகள் வானொலி(Prisoners Radio)
6. பஹாவுதீன் கரிப் – பலஸ்தீன் தொலைகாட்சி(Palestine TV)
7. அஹத் ஸக்கூத் – விளையாட்டுதுறை செய்தியாளர்(Veteran Sports Journalist)
8. ரயான் ரமி – பலஸ்தீன் ஊடக வலைப்பின்னல்(Palestinian Media Network)
9. ஸமெஹ் அல் அரியன் – அல் அக்ஸா தொலைகாட்சி(Al-Aqsa TV)
10. முஹம்மது தஹர் – ஆசிரியர், அல் ரிஸாலா பத்திரிகை(Editor in al-Resala paper)
11. அப்துல்லாஹ் வஜன் – விளையாட்டுதுறை செய்தியாளர்(Sports Journalist)
12. காலித் ஹமதா மகத் – ஸஜா செய்திதள இயக்குனர் (Director of Saja news website)
13. ஷாதி ஹம்தி அய்யாத் – சுதந்திர செய்தியாளர்(Freelance Journalist)
14. முஹம்மது நூர் அல் தின் அல் டைரி – புகைப்பட நிபுணர், பலஸ்தீன் வலைப்பின்னல்(Photojournalist works in the Palestinian Network)
15. அலி அபு அஃபெஷ் – தோஹா ஊடகத்துறை(Doha Center for Media)
16. ஸிமோன் கேமிலி – இத்தாலி செய்தியாளர், அஸோசியேட் ப்ரஸ்(Photographer in the Associated Press)
17. அப்துல்லாஹ் ஃபதல் முர்தாஜா – சுதந்திர செய்தியாளர்(Freelancer)
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக