வழக்கம் போல் ஆசியா ஸ்கூல் ஆண்டு விழா மார்கத்திற்கு புறம்பான ஆடலும் பாடலும் வெகுவிமர்ச்சையாக மக்கள் ஆதரவுடன் நடைபெற்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சினிமா கூத்தாடிகளை மிச்சும் வகையில் பிரம்பாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் பார்வையாளர்களுக்கு இடம் பற்றாகுறையால் பில்டிங் மேல் ஏறி எல்லாம் கண்டு கழித்தனர்.
இந்த வீண்விறையத்திற்கு அசல் காரணம் என்னவெனில் இவர்கள் தங்கள் முதுகுகளுக்கு பின்னே ஷரீஅத்தைத் தூக்கியெறிந்து விட்டு தங்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றத் தொடங்கி விட்டதுதான்.
தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு , தங்களின் தலைகளில் தங்கள் கைகளாலேயே மண்வாரிப் போட்டுக் கொண்டு “நாங்கள் இப்படித்தான் இருப்போம் - எங்களை எவராலும் ஏமாற்றிவிட முடியாது ” எவ்வளவு பந்தயம் வைத்துக் கொள்வோம் ? என்று சண்டித்தனம் செய்யும் சண்டாளர்களையும் இறையருள் சூழத்தான் வேண்டும் என்று அரற்றுவது அறிவின்மையின் உச்சமே. உண்மையிலே இவர்களின் ஆண்டு விழா வருடா வருடம் இப்படித்தான் இருக்கிறது.
நமது நிருபர்
இந்த நிலை பெற்றோர்கள் நினைத்தால் மாற்ற முடியும்..
பதிலளிநீக்கு