Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 27 ஜனவரி, 2015

அமெரிக்காவிற்கு அடிபணியும் இந்தியா!


தேசத்தின் இறையாண்மை, ஜனநாயகம், குடிமக்களின் சுதந்திரம் உள்ளிட்ட விழுமியங்கள் நடைமுறைக்கு வந்ததை புதுப்பித்துக்கொள்வதற்காகவே இந்தியர்களாகிய நாம் குடியரசு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் நாள் கொண்டாடி வருகிறோம்.ஆனால்,
தலைநகரான டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், நடமாடும் சுதந்திரத்திற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையின் மீதுதான் இவ்வாண்டு குடியரசு தினத்தை கடந்து செல்லவேண்டியுள்ளது.
குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராக கலந்துகொள்ளும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் பாதுகாப்பு படை தலை நகரையே தங்களது பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்திருக்கிறது.ஒருவேளை, ஒபாமாவின் வருகையையொட்டி அதிகமாக விவாதிக்கப்படக்கூடிய விஷயம் பாதுகாப்பு ஏற்பாடுகளாகத்தான் இருக்கும்.
குடியரசு தினத்தின் முந்தைய தின இரவிலிருந்தே டெல்லி நகரை பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர்.விமான நிலையத்திற்கோ, ரெயில்வே ஸ்டேஷனுக்கோ செல்வதற்கு ஒரு டாக்ஸி கூட கிடையாது.ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கவலைக்கிடமான நிலையில் உள்ள ஒரு நோயாளியை கொண்டு செல்ல முடியவில்லை. ஹோட்டல், திரையரங்கு, சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் என எங்குமே செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு தடைகளாலும், போக்குவரத்து கட்டுப்பாடுகளாலும் டெல்லி மூச்சு திணறுகிறது.இந்தியா குடியரசு ஆன பிறகு முதல் முறையாக மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தேசம் சந்திக்கிறது.ஒரு நாட்டின் தலைவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பையே கொண்டாட்டமாக மாற்றும் முரண்பட்ட நிலையை மோடி அரசின் இந்தியர்களின் மீது திணித்திருப்பது வெட்கக் கேடு.
இந்திய-அமெரிக்க உறவில் வரவிருக்கும் மாற்றத்திற்கான அடையாளமே ஒபாமாவின் சுற்றுப்பயணம் என்பதை ஒபாமாவும், மோடியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.இந்த மாற்றம் எதிர்பார்த்ததைப் போலவே பாதுகாப்பு மற்றும் அணுசக்தி துறையில் பரஸ்பர ஒத்துழைப்பே என்பது தெளிவாகியுள்ளது. ஒத்துழைப்பு என்றால் அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் புரிவது என்பது பொருள்.டெல்லி ஹைதராபாத் பவனில் நடந்த ஒபாமா-மோடி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளில் இந்தியா அமெரிக்காவிற்கு அடிபணிந்துள்ளது என்பதை காட்டுகிறது.அணு உலையில் விபத்து  ஏற்பட்டால்  அணுசக்தி விநியோக நிறுவனங்களிடமிருந்து இழப்பீட்டை ஈடாக்க முடியாது என்ற பிரிவு இதனை உணர்த்துகிறது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த பா.ஜ.க, இன்று அதே அடிமை ஒப்பந்தத்தின் இன்னும் அதிகமான நீர்த்துப்போன வடிவத்தை அவசரமாக நிறைவேற்றுகிறது என்றால் பா.ஜ.கவின் கபட வேடத்தை இந்திய மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஊர்ஜிதப்படுத்தவும், உலகில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஒரு ஆயுத சந்தையாக இந்தியாவை மாற்றவும் ஒபாமாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய ஒரு பொன்னான வாய்ப்பு இந்த சுற்றுப்பயணம்.ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ‘நிரந்தர உறுப்பினர் பதவி’ என்ற ஒரு எலும்புத்துண்டையும் தட்டில் வைத்து நீட்டுகிறார் ஒபாமா.எரி சக்தி உற்பத்தி துறையில் இந்தியாவுக்கு அளிக்கப்படும் உதவி அடிமைத்தனத்தின் புதிய வாசல்களை திறக்கவே அதிகம் பயன்படும்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக