பி.ஏ. இஸ்லாமிக் ஸ்டடி இன்று பல நிறுவனங்களில் கற்பிக்கப்படும் அழகிய இஸ்லாமிய இளங்கலை பட்டக்கல்வியாக உள்ளது. தெரிந்ததே.!
+2 முடித்தவர்கள் அல்லது அல்குர்ஆனை இயல்பாக படிக்கும் மாணவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம். இந்தாண்டு முதல் விசேடமாக பி.ஏ. இஸ்லாமிக் இளங்கலை வகுப்பை பகுதி நேரமாகவும்,
மாலை நேரத்தில் சேர்ந்து படிக்கும் வகையிலும் சிறப்பு ஏற்பாட்டை பி.எஸ்.ஏ. அப்துர்ரஹ்மான் பல்கலைக்கழகம் செய்துள்ளது.
இஸ்லாமிய விழுமங்களை, சிறப்பை, மார்க்கம் கூறும் தெளிவான விசயங்களை அறிய பலருக்கும் ஆவலுண்டு. ஆனால் வாழ்க்கைப்பாட்டிற்காக கற்பதற்கு உரிய தகுதி, ஆவல் இருந்தாலும் ஏக்கம் மட்டுமே நேரமின்மைக் காரணமாக வெளிப்படும்.
இந்தக் குறைகளைக் களைந்து, கவலைகளை விட்டு எல்லோரும் படிப்பதற்கு வசதியாக. குறிப்பாக இதர கல்லூரிகளில் சேர்ந்து வேறு துறை படிப்போர், வேலைக்குப் போவோர், வணிகத்தில் ஈடுபடுவோர், சகோதரிகள் என பல தரப்பினரும். பி.ஏ. இஸ்லாமிக் இளங்கலை வகுப்பில் சேரலாம்.
நம்மவர்களுக்காக சிறப்பாக உலகின் தலைசிறந்த இஸ்லாமிய நிறுவனங்களான எகிப்தின் அல் அஜ்ஹர் பல்கலைக் கழகம், சவூதி அரேபியாவின் உம்முல் குரா பல்கலைக் கழகம் போன்றவற்றின் பாடத்திட்ட முறைகளை உள்ளடக்கி. முற்றிலும் புதுமையான நவீன தொழில் நுட்ப அடிப்படையில் மலேசியாவின் மாரா டெக்னாலஜி உதவியுடன் கற்பித்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதர விவரங்கள் அறிய 044 - 22751347 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
டாக்டர் படிப்பு என்றாலே எம்.பி.பி.எஸ்.தான் பலருக்கு நினைவுக்கு வருகிறது. வெள்ளையர்கள் காலத்தில் இம்மருத்துவக் கல்வி பிரபலமானது. அவர்கள் சென்ற பின்னரும் அதுவே நிலைத்துவிட்டது.
ஆனால் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக சீனம், இந்தோனேஷியா, தாய்லாந்து, வியட்நாம்,மியான்மர், பல அரபு நாடுகள், எகிப்து, இந்தியா, நேபாளம் , வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உட்பட பல நாட்டு மக்களின் பெருமதிப்புக்குரிய மருத்துவமாக
விளங்குபவை ஆங்கில மருத்துவமல்ல. அந்தந்த நாடுகளில் காலம் காலமாக நம்பிக்கையோடு பின்பற்றப்பட்டு வரும் சித்தா, யுனானி, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் சீன மருத்துவ முறைகள்தான்.
மேற்கணும் மருத்துவ முறைகள் தற்போது இந்திய மருத்துவம் எனவும், மாற்று மருத்துவம் எனவும் வழங்கப்படுகிறது. ஆனால் இவைதான் அடிப்படை மருத்துவமாக தொடக்கம் முதல் விளங்கியது. பின்னர் இவைகளுக்கு மாற்றாக வந்த ஆங்கில மருத்துவம் அடிப்படை போலவும், பாரம்பரிய மருத்துவம் மாற்றைப் போலவும் புரிந்து கொள்ளப்படுகிறது.
இன்றைக்கு கிராம அளவில் சித்த மருத்துவர் தேவை அதிகரித்துவிட்டது. ஏனெனில் சமீபத்தில் பிரபலமான இதய மருத்துவர் ஒருவரின் தலைமையில் நிகழ்த்திய ஆய்வில் இதயநோய், கொழுப்பு அடைப்பு, மூட்டு வலி,தோல்நோய்கள், கருப்பை நோய், மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள தலைசிறந்த மூலிகை மருந்துகள் மூலம் நன்கு குணம் தெரிவதாக முடிவினை அறிவித்தார். இன்னும் நன்கு படித்து முறையான மருத்துவம் செய்யும் சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்களை விடவும் நன்கு பொருளீட்டி வருவதைக் காணலாம். ஆகவே +2 முடித்த மாணவர்கள் சித்த மருத்துவப் பட்டக் கல்வியைப் பெற்று ஊர்தோறும் சொந்தமாக மருத்துவமனைகளை அமைக்கலாம். அயல்நாடுகளுக்கு அதிகளவு விற்பனையாகும் மருந்துகளில் இந்திய மருந்துகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் நாட்டிற்கு நிறைய அன்னியச் செலாவணியை ஈட்டித்தருகின்றன.
+2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவர்கள் சித்த மருத்துவப் படிப்பில் சேரத்தகுதியுள்ளவர்கள். ஐந்தரை ஆண்டுகால பட்டப்படிப்பான இதனைப் படிப்பவர்களுக்கு அரசுப்பணி, தனியார் மருத்துவமனை, சொந்த தொழில் செய்யும் வாய்ப்பு, தனியார் மருந்து தயாரிப்பகங்களில் பணி என ஏராளமான வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சென்னை அரும்பாக்கத்திலும், நெல்லை பாளையாங்கோட்டையிலும் அரசுக் கல்லூரிகள் உள்ளன. இதைப் போன்றே தனியார் கல்லூரிகளான குமரி மாவட்டம் மூஞ்சிறையில் உள்ள திருவிதாங்கூர் சித்த வைத்திய கல்லூரி, ஸ்ரீசாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரி மேற்கு தாம்பரம், சென்னை, வேலுமயில் சித்த மருத்துவக்கல்லூரி திருப்பெரும்புதூர், ஆர்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி கோவை போன்றவற்றிலும் பட்டக்கல்வி தருகின்றனர். மேலும் மருத்துவத்தில் முதுநிலையும், ஆய்வுக் கல்வியிலும் பட்டமளிக்கின்றனர்.
கூடுமானவரை தங்கிப் படிக்கும் வகையில் தான் பல கல்லூரிகளிலும் விடுதியுள்ளது. ஏனெனில் நாலரை ஆண்டுகள் செய்முறை, வகுப்பறை பயிற்சிகளை மூலிகை, மருந்து, உடற்கூறு, நோய்களின் தன்மை இவைகளைப் பற்றி கற்பிக்கின்றனர். பின்னர் ஓராண்டு பயிற்சி மருத்துவராகவும் செயல்பட்ட பின்னரே இப்பட்டக்கல்வி முழுமை பெறும்.
+2 முடித்தவுடன் தொடர்ந்து ஐந்தரை ஆண்டுகளை செலவிட்டுப் படித்தால் சிறந்த சித்த மருத்துவராக முடியும். சித்த மருத்துவக் கல்லூரிகளில் சித்த மருத்துவம் கற்பிப்பதைப் போலவே ஆயுர்வேதத்தையும்,யுனானி மருத்துவமும் கற்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தரும் பட்டங்கள் அரசு சான்றிதழுடன் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரமும் பெற்றுள்ளது.
மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மெய்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக