Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 15 ஜனவரி, 2015

நபிகள் நாயகத்தைச் சித்தரிக்கும் கருத்துச் சித்திரம் மீண்டும் வெளியானது சார்லி ஹெப்டோ!

தாக்குதலுக்குப் பிந்தைய முதல் பதிப்பில், நபிகள் நாயகத்தைச் சித்தரிக்கும் கருத்துச் சித்திரம் இடம்பெற்ற அட்டைப் படத்துடன், பிரான்ஸ்சின் பிரபல அங்கதப் பத்திரிகையான சார்லி ஹெப்டோ மீண்டும் வெளியானது.
இந்தப் பத்திரிகையின் சிறப்புப் பதிப்பு மற்ற மொழிகளிலும் அச்சிடப்படப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் சார்லி ஹெப்டோவின் முதல் பதிப்பை வெளியிட பிரான்ஸின் ‘விடுதலை பத்திரிகை’ இயக்கமும் உதவிபுரிந்துள்ளது.

சார்லி ஹெப்டோவின் அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தை சித்தரித்து அவரது கையில் ‘Je suis Charlie’ (நான்தான் சார்லி) என்ற வாசகம் கொண்ட பதாகை இருக்கும்படியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கருத்துச் சித்திரத்தின் தலைப்பில் ‘Tout est Pardonne’ (எல்லாம் மன்னித்தாகவிட்டது) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இன்று வெளியாகியுள்ள சார்லி ஹெப்டோவின் அட்டைப்படத்தை பிரான்ஸின் விடுதலை இயக்கம் பிரத்யேகமாக திங்கள்கிழமை இரவே வெளியிட்டது.
இது குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகையின் சட்ட நிபுணர் ரிச்சர்ட் மால்கா கூறும்போது, “சார்லி ஹெப்டோவில் இன்று நபிகள் நாயகத்தின் கருத்துச் சித்திரம் இடம்பெற வேண்டியது இன்றியமையாதது. இது அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்” என்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் பத்திரிகையில் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பல்பொருள் அங்காடியில் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதில், தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த 2011-ம் ஆண்டு முகமது நபியைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டதாக இதே பத்திரிகை அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக