லெப்பைக்குடிக்காடு அருகில் உள்ள கிராமங்களில் அறிவகம் தாஃவா குழு சார்பாக நடைபெற்ற
தாஃவா!
(நபியே !) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் , அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக !
(அல்குர்ஆன் 16 : 125)
முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளில் ஒன்றான இஸ்லாத்தை ஏனைய சமூகமக்களுக்கு எடுத்து சொல்லிடும் அழகியதொரு தஃவா பணியை தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள்வரை பல்வேறு நிலைகளில் அறிவகம் தஃவா குழு கடந்த பல வருடங்களாக செய்துவருகிறோம்அல்ஹம்துலில்லாஹ்.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் அறிவகம் தஃவா குழு சார்பாக (19.01.2015) அன்று லெப்பைக்குடிக்காடு அருகில் உள்ள கிராமங்களான திருமாந்துறை மற்றும் பெண்ணக்கோணம் ஆகிய கிராமங்களில் தஃவா - இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது. இதில் மாற்றுமத சகோதரர்களுக்குஇஸ்லாத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அன்று ஒரு நாள் மட்டும் 139 நபர்களுக்கு இஸ்லாத்தை அறிமுக படுத்தப்பட்டது.இந்த தஃவாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் லெப்பைக்குடிக் காடு அறிவகம் தஃவா குழுவின் செயல்வீரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்....
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK
மாஷா அல்லாஹ்!
பதிலளிநீக்கு