Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 21 ஜனவரி, 2015

அரசியல் தலைவர்களை அதிகமாக நம்பும் இந்திய மக்கள்?


சுவிட்சர்லாந்து: நம்பிக்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தை பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட் அமைப்பு, உலக மக்கள் அரசு நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள், ஊடகங்கள், அரசு சாரா அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதில், இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது, இதில் ஐக்கிய அரவு எமிரேட்ஸ், இந்தியா, சீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.
மேலும், நம்பத்தன்மை குறைந்த நாடுகளாக தென் ஆப்ரிக்கா, ரஷ்யா இத்தாலி உள்ளிட்ட மேலும் நம்பகத்தன்மை குறைந்த நாடுகளாக தென்ஆப்ரிக்கா, ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங், இத்தாலி உட்பட 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
பிரேசில்,மலேசியா, அமெரிக்கா, உட்பட 8 நாடுகள் நடுநிலை நாடுகளாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரசியல் தலைவர்களின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை 82 சதவிகிதமாக உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக