மனநலம் குன்றிய நிலை என்பது, மூளை சேதமடைவதாலோ, பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகளாலோ, ஒரு மனிதருக்குள் ஏற்படும் குறைபாடுஆகும். இதன் மூலம் மூளையின் சிந்தனை மற்றும் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், மிகுந்த சிரமத்துடனேயே எதையும் கற்றுக்கொள்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட
குழந்தைகள் மற்ற சாதாரண குழந்தைகளை விட தாமாகவே, அமரவோ, தவழவோ,நடக்கவோ மற்றும் பேசவோ செய்கிறார்கள். மேலும் வாய்ப்பேச்சு மேம்பாடு, நினைவுத்திறன் குறைபாடு, சமூக விதிமுறைகளைப் புரிந்து கொள்ள சிரமப்படுதல்,
சிக்கல் தீர்க்கும் திறன் குறைபாடு, சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ள சிரமப்படுதல் போன்றவை இது போன்ற குழந்தைகளுக்கு இருக்கும் எனவே இக்குழந்தைகள்' தங்களின் குறைபாடுகளிலிருந்து வெளிவர சிறந்த நிபுணர்களின் துனை தேவைப்படுகிறது, அவர்களுக்கு சிறப்புப் பள்ளிகளும் தொழில் பயிற்சி மையங்களும் தேவைப்படுகின்றன.
இந்தப் பணியின் தன்மைகள்.
இந்தப் பணியானது அதிக உடல் உழைப்பினைக் கொண்டதல்ல அதே சமயம் அர்ப்பணிப்பு, அக்கறை மற்றும் பொறுப்பு ஆகியவை நிறைந்தது. இதற்கான சிறப்பு கவனிப்பு மையங்களில், சைக்காலஜிஸ்ட்கள்,மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சமூக சேவகர்கள் ஆகியோர் பணியாற்றுவர். இவர்கள் மனநலம் குன்றியவர்களின் நல் வாழ்வையே ஒரு பொது நோக்கமாகக் கொண்டு பணிபுரிவார்கள்.
இத்தொழிலைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் அதிக அன்பு, கவனிப்பு மற்றும் புதிய அணுகுமுறைகளை யோசிக்கும் திறன் உடையவர்களாக இருக்கவேண்டும். மனநலம் குன்றிய துறையில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் நோயாளிகளை கவனிப்பதற்கு பயிற்சியளிக்கப்படுகிறார்கள். வேலைச் சூழலானது ரிலாக்சாகவும், நட்புமுறையிலும் இருக்கும் மற்றும் இத்துறையில் பணிபுரியும் நபர்கள் பொதுவாக இரக்க சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.
தனிப்பட்ட பண்புகள்.
நட்பு ரீதியான மற்றும் ஈர்ப்புத்தன்மை கொண்ட இயல்பு, பொறுமை, அன்பு, கண்ணியம், நோக்கத்தை இழக்காத தன்மை, சிறந்த அணுகுமுறை மற்றும் உற்சாகமான மற்றும் இரக்கப் பண்பு போன்றவை இத்துறை நிபுணர்களுக்கு இருக்க வேண்டும்.
இத்துறை சார்ந்த படிப்பு
இந்தியாவில் ஏராளமானன கல்வி நிறுவனங்கள் இது தொடர்பான படிப்புகளை வழங்குகிறது. டெல்லியிலுள்ள இந்திய மறுவாழ்வு கவுன்சிலானது ஒரு சட்ட அமைப்பாகும். இத்துறை தொடர்பாக வழங்கப்படும் படிப்புகளின் தரத்தை மதிப்பிடுவது இந்த கவுன்சிலின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.
மேலும் தற்போது இருக்கும் பாடத்திட்டத்தில் மாற்றங்களை செய்வதும், திருத்தியமைப்பதும் மற்றும் புதிய மேம்பாடுகளை சேர்ப்பதும் இந்த கவுன்சிலின் பணிகள். இந்த கவுன்சிலால் அங்கிகரிக்கபட்ட படிப்புகள் கீழே கொடுக்கபட்டுள்ளன.
காது கேளாதோர் தொடர்பான பி.எட். படிப்பு
காது கேளாதோர் தொடர்பான டி.எட். (டிப்ளமோ இன் எஜுகேஷன்) படிப்பு.
எம். எஸ்.சி - கேட்டல் மொழி மற்றும் பேசுதல்
எம். எஸ்.சி - பேசுதல் மற்றும் கேட்டல்
பி.எம்.ஆர் - மனநலம் பாதித்தலில் பட்டப்படிப்பு
டி.எஸ்.இ - (எம்ஆர்) சிறப்பு படிப்பில் டிப்ளமோ
பி.எஸ்.சி - செயற்கை உறுப்புகள் மற்றும் செயற்கை எலும்புகள் பொறியியல் துறையில் டிப்ளமோ
பலவித மறுவாழ்வு பணிகளில் சான்றிதழ் படிப்பு
பார்வையற்றோர் தொடர்பான பி.எட். படிப்பு.
வேலைவாய்ப்புகள்
ஆரம்பப் பள்ளிகள், தொழிற்கல்வி மற்றும் மறுவாழ்வு மையங்கள், சிறப்புப் பள்ளிகள், சமூக அடிப்படையிலான சிறப்புப் படிப்புத் திட்டங்கள், மருத்துவமனைகளிலுள்ள குழந்தை நல மையங்கள், குழந்தை வழி காட்டி கிளீனிக்குகள், குழந்தை மேம்பாட்டு மையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் முக்கிய சுகாதார மையங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
பி.எஸ்.சி. சைக்காலஜி பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வியாக ஆலிமா படிப்போடு பயின்றிட அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது அம்மாபட்டிணம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி.
மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மெய்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக