Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 24 ஜனவரி, 2015

ஊர்ல கல்யாணம் வச்சுயிருக்கீங்களா அப்ப உங்களுக்குதான் இந்த செய்தி ...

அஸ்ஸலாமு அலைக்கும்
நமதூர் மக்களுக்கு அன்பான வேண்டுகோள். நமது லப்பைக்குடிகாடு பேருராட்சி பின்புரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் உடல் ஊனமுற்ற,காதுகேளாத,முலைவளர்ச்சி குறைவு குழந்தைகளுக்கு தினமும் வகுப்பு நடைபெறுகிறது. சுமார் 35 குழந்தைகள் படிக்கிறார்கள் அதில் அங்கிய 25 குழந்தைகள் தங்கிய படிக்கிறார்கள்.மீதமுள்ள 10 குழந்தைகள் தினமும் வீடு சென்று வருகின்றனர். இதில் நமதூரை சேர்ந்த குழந்தைகளும் மற்றும் நமதூரை சுற்றிலும் உள்ள குழந்தைகளும் படிக்கிறார்கள்.அதில் 3ஆசிரியைகளும் பணியாற்றுகிறார்கள்.

குறிப்பு: ந‌மதூரில் நடக்கும் திருமனத்தில் மதிய உணவு ஏற்ப்பாடு செய்கிறோம்.அதிலிருந்து நமதூர் மதரஸாக்களுக்கு கொடுக்கிறார்கள்.அல்ஹம்துலிலாஹ் நல்லவிசயம்.அதைப்போல் இந்த குழந்தைகளுக்கும் (1 கூடை அளவு)கொடுத்தாள் வருடத்தில் பாதி நாட்கள் உணவு பூர்தியாகிவிடும்.இதைப்போல் யாரேனும் கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்ப்பு கொள்ளளாம்.

இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.10 வார்டு கவுன்சிலர் BD சாகுல் ஹமித் லப்பைக்குடிகாடு பேருராட்சி

நன்றி BD சாகுல் ஹமித்
முகநூலிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக