Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்திய விளையாட்டு விழா! ஜமால் முஹம்மத் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேரா. மன்சூர் பங்கேற்பு!!


ஷார்ஜா: அமீரகத்தில் பல சேவைகளை ஆற்றி வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கடந்த 02.01.2015 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா யுனிவர்சிட்டி
மைதானத்தில் காலை முதல் மாலை வரை விளையாட்டு விழாவை வெகு சிறப்பாக நடத்தியது. இதில் திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.எம். மன்சூர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.


ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் திரளாகக் கலந்துகொண்ட இந்த வண்ணமயமான விளையாட்டுப் போட்டிகளில் துபை, ஷார்ஜா, அபூதாபி ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றன. துபை அணி வீரர்கள் கறுப்பு வண்ணமும், ஷார்ஜா அணி வீரர்கள் நீல வண்ணமும், அபூதாபி அணி வீரர்கள் சிவப்பு வண்ணமும் கொண்ட ஆடைகளை அணிந்திருந்தனர்.
கால்பந்து, கைப்பந்து, கபடி, கயிறு இழுத்தல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4×100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தனித் தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. குழந்தைகள் அனைவருக்கும் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு வீரர்கள் அன்றைய தினம் முழுவதும் அனைத்துப் போட்டிகளிலும் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தனர். உத்வேகத்தோடு விளையாடினாலும் யாரும் கட்டுப்பாட்டை இழக்காமல் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
காலை முதல் மாலை வரை நடந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகளின் அறிவிப்புகளையும், வர்ணனைகளையும் எம்.எஸ். அப்துல் ஹமீது, பத்தமடை முஹம்மது அலீ ஆகியோர் செய்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:
கால்பந்து கோப்பை
வெற்றிக் கோப்பை – அபூதாபி அணி
ரன்னர் கோப்பை – ஷார்ஜா அணி
கைப்பந்துக் கோப்பை
வெற்றிக் கோப்பை – துபை அணி
ரன்னர் கோப்பை – ஷார்ஜா அணி
கபடிக் கோப்பை
வெற்றிக் கோப்பை – துபை அணி
ரன்னர் கோப்பை – அபூதாபி அணி
கயிறு இழுத்தல் போட்டி
வெற்றிக் கோப்பை - துபை அணி
ரன்னர் கோப்பை - அபூதாபி அணி
குண்டு எறிதல் போட்டி
வெற்றிக் கோப்பை - ஜுபைர் (அபூதாபி)
ரன்னர் கோப்பை - தவ்ஃபீக் (துபை)
400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயம்
வெற்றிக் கோப்பை – அபூதாபி அணி
ரன்னர் கோப்பை – துபை அணி
100 மீட்டர் ஓட்டப் பந்தய மெடல்கள்
முதலிடம் - ராஜா முஹம்மது (துபை)
இரண்டாவது இடம் – ரிஸ்வான் (அபூதாபி)
மூன்றாவது இடம் - அன்வர் (துபை)
ஓவர்ஆல் சேம்பியன்ஷிப் கோப்பை
அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் துபை அணி ஓவர்ஆல் சேம்பியன்ஷிப் கோப்பையைத் தட்டிச் சென்றது.
சிலம்பாட்டம்
மாலையில் போட்டிகள் அனைத்தும் முடிந்ததும் மூன்று அணிகளின் வீரர்களும் அவரவருக்குரிய வண்ண உடையுடன் மைதானத்தில் அணிவகுத்து வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அதன் பின்னர் பத்தமடை பொறியாளர் நாகூர் மீரான், நெல்லை ஏர்வாடி பொறியாளர் தவ்ஃபீக், நெல்லை ஏர்வாடி கவிஞர் பத்ர் ஸமான், மேலப்பாளயம் ‘டெமோ’ காஜா ஆகியோர் அணி வகுத்து அமர்ந்த அணி வீரர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் வீர விளையாட்டான சிலம்பாட்டம் ஆடினர். இது காண்போர் அனைவரையும் கவர்ந்தது.
பரிசளிப்பு விழா
இறுதியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ் மண்டல பொதுச் செயலாளர் வலசை ஃபைஸல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) தமிழ் மாநிலத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் வாழத்துரை வழங்கினார். அடுத்ததாக, அன்றைய மதிய உணவுக்கு அனுசரணை வழங்கிய “சுகி ரெஸ்டாரண்ட்” உரிமையாளர் அசதுல்லாஹ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.எம். மன்சூர் ஸாகிப் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பேரா. மன்சூர் ஸாகிப், “சுகி ரெஸ்டாரண்ட்” உரிமையாளர் அசதுல்லாஹ், “ஐ கிரேடு” நிறுவன உரிமையாளர் முஹம்மத் ஃபர்வீஸ், EIFF தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி பொதுச் செயலாளர் வலசை ஃபைஸல், எழுத்தாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், அணி வீரர்களுக்கும் பரிசுகளையும், கோப்பைகளையும், மெடல்களையும் வழங்கினர்.
பெண்களுக்கான பரிசுகள் அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவை பொறியாளர் தமீம் மன்சூர் அவர்கள் சிறப்புற நெறிப்படுத்தி, தொகுத்து வழங்கினார். இறுதியில் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் நன்றியுரை நவில, பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.
இந்த விளையாட்டு விழா ஒருங்கிணைப்பாளரான அபூதாபி ஃபெரோஸ்கான் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் மிக நேர்த்தியாக திறம்பட செய்திருந்தார். பார்வையாளர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவை வழங்கப்பட்டன.
தன்னலமின்றி உழைத்த தன்னார்வத் தொண்டர்கள் காலை முதல் மாலை வரை சுழன்று சுழன்று பணியாற்றி அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட செய்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக