இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தி சுவரொட்டி தயாரித்து ஒட்டிய வழக்கில் ஈரோடு மாவட்ட இந்து முன்னணி செயலாளரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கடந்த வாரம் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தும் வாசகங்களை கொண்ட சுவரொட்டிகள் ஈரோடு மாவட்ட இந்து முன்னணி
சார்பில் ஒட்டப்பட்டுள்ளதாக வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்லாமிய அமைப்பினர் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் மனு அளித்தனர். மேலும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பிலும், விடுதலை கட்சி சார்பிலும் தனித்தனியாக எஸ்.பி-யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், வீரப்பன் சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயன் தலைமையில் தனிப்படை அமைத்து, விசாரித்து வந்தனர். மேலும் இதுபற்றி சைபர் கிரைம் போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு கோட்டை காவலன் வீதியில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தின் கணினியில் சர்ச்சைக்குரிய சுவரொட்டியின் மாதிரி வடிவம் தயார் செய்து வைத்திருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, அச்சகத்தின் உரிமையாளர் செந்தில்குமார் என்பவரிடம் விசாரித்ததில் ஈரோடு புறநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் பிரபுராம் தயாரிக்க சொன்னதாகவும், ஆனால் சுவரொட்டியில் உள்ள வாசகங்களை பார்த்து தான் அச்சிட மறுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், பிரபுராம் சுவரொட்டி தகவலை கணினியில் இருந்து தரவிறக்கம் செய்து வாங்கி கொண்டு போனதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பிரபுராமை சுவரொட்டி ஒட்டிய வழக்கில் கைது செய்து, ஈரோடு மாஜிஸ்திரேட் அருண் சபாபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். நாட்டில் இது போன்று மதகலவரன்களை தூண்ட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடுமையான தண்டனை வழங்க பாடல் வேண்டும்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக