நியூயார்க்: 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனஅழிப்பு தொடர்பாக மோடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சங்பரிவாரத்தினரால் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் பலர் அநியாயமாக கொல்லப்பட்டனர். அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக
இருந்த நரேந்திர மோடி, அப்படுகொலைக்கு அரசு இயந்திரங்களைப் பயன்படுத்த உதவினார் என்றும் படுகொலையில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனைத் தடுப்பதற்கு அவர் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் அமெரிக்க நீதிமன்றத்தில் அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
குடிமக்களைச் சமமாக நடத்தாத, இனப்படுகொலை செய்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு அமெரிக்கா விசாவும் மறுத்து வந்தது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மோடி பிரதமரான நிலையில், அவருக்கு அமெரிக்கா விசா வழங்கியது. தற்போது அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் மோடி மீதான அந்த வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனாலிசா டோரஸ், “நட்புறவை பேணும் ஒரு சிறந்த அண்டை நாட்டு தலைவர் மோடி. இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று தம் தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனாலிசா டோரஸ், “நட்புறவை பேணும் ஒரு சிறந்த அண்டை நாட்டு தலைவர் மோடி. இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று தம் தீர்ப்பில் கூறியுள்ளார்.
அதிகாரத்தில் இருந்தால் என்ன அக்கிரமம் வேண்டுமானாலும் செய்யலாம்; தற்போதைய நீதி, நியாயம் அதிகாரத்துக்குத் தலைவணங்கக்கூடியது என்பதை மெய்ப்பிப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அமைந்துள்ளது என பல்வேறு சமூக பார்வையாளர்களிடமிருந்து இத்தீர்ப்புக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக