மீலாது தினத்தினை முன்னிட்டு வரும் ஜனவரி 4ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 4.1.2015 அன்று நபிகள் நாயகம் பிறந்த தினத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12-ன்படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவைகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் தவறினால், மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக