இரோம் ஷர்மிளா விடுதலை: நீதிமன்றம் உத்தரவு !
கடந்த 2000ம் ஆண்டு மணிப் பூரில் ஆயுதப்படை நடத்திய வன் முறையைக் கண்டித்து ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். எனினும் அவருக்கு கட்டாயமாக உணவு திணிக்கப்பட்டு வருகிறது.
உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை செய்துகொள்வ தாகாது என்று கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும், அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். எனவே, போலீஸார் மீண்டும் புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். தற்போது மணிப்பூர் மாநில மாவட்ட நீதிமன்றம் ஒன்று அவரை விடுதலை செய்துள்ளது.
தற்கொலை முயற்சிகளைக் குற்றமாகக் கருத முடியாது என்று சமீபத்தில் மத்திய அரசு தெரிவித் திருந்தது. எனவே, இரோம் ஷர்மிளாவை இனியாவது முற்றிலு மாக விடுதலை செய்வார்கள் என்று அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக