இன்று (19-01-2015) நமதூரில் மஃக்ரிப் சமயத்தில் பேரூராட்சி சார்பாக கொசு மருந்து அடித்தனர். கிழக்கு தெற்கு பழைய பள்ளிவாசல் அருகில் வரும் போது திடீர் என கொசு அடிக்கும் மிஷின் எறிய ஆரம்பித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர். இதில் குழந்தைகள் தான் அதிகமாக இருந்தனர். தீ உடனடியாக அனைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிக்கப்பட்டது. இது போன்ற சமயத்தில் தாய் மார்கள் தங்களுடைய குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே இந்த கொசு மருந்தால் சில பேருக்கு மூச்சு தினரல் ஏற்படுகின்றது. அதிலிருந்து வெளியாகும் புகை குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் இதில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது வாழ்வாதார சம்மந்தப்பட்ட விசயம்.
எந்த ஒரு தீங்கும் ஏற்படாமல் பாதுகாத்த அல்லாஹ்விற்கே புகழ்அனைத்தும்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக