சுன்னத்துவல் ஜமாத் VS TNTJ
பொதுவாக எதிர்மறையான
தலைப்புக்களை இடுவதற்கு நாங்கள் விரும்புவதில்லை. என்றாலும், சமூகத்தின் பிளவுகள் என்று
வரும்போது அவை அடியோடு அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இருவோரு கருத்துக்கள் இல்லை அல்லவா
? இந்த செய்தியும் நமதூரை மையப்படுத்தியோ வெளியிடுகின்றோம்.
கடந்த காலங்களில்
முன்னால் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் அவர்கள் கூறிய வார்த்தை மிக முக்கியமானது.
தேர்தல் முறைகேடுகளை வாய் கிழிய பேசும் ஊடகங்களுக்கு அவர் கொடுத்த சவுக்கடி இதோ. “
அரசியல்வாதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் செய்திகள் வெளியிடுவது
தேர்தல் முறை கேடு தான். இதற்கான தண்டனைகள் விரைவில் அறிவிக்கப்படும் ” என்று தெரிவித்தார்.
இதைவிடத் கேவலமான
விஷயம் எதுவும் உண்டா ? அவரை பேச வைத்த சம்பவம் எது தெரியுமா ?இப்போது நடந்து முடிந்த
தேர்தல்கள் தான்.
இப்போது நமதூரில்
நடைபெற்ற சம்பவத்திற்கு வருவோம். இன்று
13-01-2015 மேற்கு சுன்னத்துவல் ஜமாத்தின் சார்பாக
காவல் துறைக்கு ஒரு புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் நாங்கள் சுன்னத்துவல்
ஜமாத் சார்பாக மீலாது விழா 15-01-2015 அன்று நடத்த உள்ளோம். அதை விளம்பர படுத்தும்
விதமாக ஊரின் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தோம். நாங்கள் யார் வம்பு
தும்புக்கும் போகுறது இல்லை. ஆனால் நாங்கள் ஒட்டியிருந்த சுவரொட்டிகள் மீது தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத் காரர்கள் அவர்களுடைய போஸ்டர் எங்கள் சுவரொட்டிகள் மீது எங்கள் நிகழ்ச்சி
முடியும் முன்பாகவே ஒட்டி உள்ளனர்.
உடனே காவல் துறையினர்
மேலும் பிரச்சனை ஏற்படாமல் வண்ணம் நமதூரில் ஒட்டியிருந்த சுவரொட்டிகளை பார்வையிட்டனர்.
பின்னர் இரு தரப்பினர் இடத்திலும் சமாதானம் ஏற்படுத்தினர்.
அந்த சுவரொட்டியை
புகைப்படம் எடுக்க சென்ற நமது நிருபர் அதற்கு முன் அந்த சுவரொட்டி முலுவதுமாக கழிக்கப்பட்டு
இருந்ததை பார்த்து அதிச்சி அடைந்தார்.
இந்த சம்பவத்தை
மையப்படுத்தி அங்கு இருந்த ஒரு சிலர் இவர்கள் இது போன்று இதற்கு முன் கடந்த மாதம் பாப்புலர்
ஃப்ரண்ட் நடத்திய ஒரு மாநாட்டு போஸ்டர் மீதும் ஒட்டியுள்ளனர்.
இவர்களை (
TNTJ ) குறைகூற வேண்டும் என இதை தொரிவிக்க வில்லை. ஏனொனில் இது போன்ற சம்பவம் முதல்
தடவையாக இருந்தால் நாம் இதை கண்டு கொள்ள போவது இல்லை. தொரியாது நடந்து இருக்கும் எனலாம்.
ஆனால் வேண்டு மென்றோ இதை திரும்ப திரும்ப செய்து உள்ளனர். இது இவர்களின் தலைவர்களின்
ஆசியோடு நடைபெறுகின்றனவா என்று நமக்கு சந்தேகம் ஏற்பட காரணமாக அமைகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்
“ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக
இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க
உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும்.
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக
இருக்கின்றான்.” ( அல்குர்ஆன் 5:8 )
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக