புராணங்கள், ஊகங்களின் அடிப்படையில் இந்தியாவின் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதுவது வருத்தமளிப்பதாக வரலாற்று ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.
வரலாற்று அறிஞர்கள், ஆர்வலர்கள் 10 ஆயிரத்தும் மேற்பட்டோர் அங்கம் வகிக்கும் கவுன்சிலின் 80-ஆம் ஆண்டையொட்டி டெல்லியில் அண்மையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில், புராணங்கள், ஊகங்களின் அடிப்படையில் இந்தியாவின் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடியும், வரலாற்று உண்மைகளுக்கு புறம்பாக பேசுவது வருத்தமளிக்கிறது.
மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் விநாயகனின் தலையில் யானையின் தலையைப் பொருத்தியதன் மூலம் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை தொடங்கிவிட்டது என்று பிரதமர் பேசியிருக்கிறார். இது போன்ற கருத்துகள் வரலாற்றைத் திரிப்பதாகும். இவ்வாறு திரிக்கப்படும் வரலாற்று உண்மைகள் பள்ளிப் பாட புத்தங்களில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுவது கவலைக்குரியது என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக