Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 23 ஜனவரி, 2015

ஒரு எழுத்தாளரின் குமுறல் ...


சென்னை புத்தக கண்காட்சி நேற்றுடன் இனிதே முடிந்தது.. அதற்கு அதிகமான நாட்கள் சென்று வரும் ஒரு நண்பர் கூறினார்.


"என்னங்க பெரிய பெரிய எழுத்தாளர்களாம் வராங்க,
அவங்க கிட்ட பேச அஞ்சு ஆறு பேரு தான் போறாங்க..
இவரு நல்ல எழுத்தாளருனு சொன்னா கூட கண்டுக்க மாட்றாங்க

...ஆனா சினிமால ஓரமா டீ ஆதுனவ வந்தாகூட
நாப்பது, ஐம்பது பேர் கூடிறாங்க...
புத்தக கண்காட்சில எழுத்தாளர் தானே ஹீரோ...
என்ன ரசனையோ நம்ம ஆளுகளுக்கு.." என அழுத்துக் கொண்டார்..

அப்பொழுது எனக்கு ஏ.பி.எம்.இத்ரீஸ் அவர்களின்
இந்த பதிவு தான் நினைவுக்கு வந்தது..
."சினிமா மக்கள் கலையாக உள்ளது.
காரணம் மக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. துரதிஸ்டவசமாக மக்களை அது பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக