புதன், 30 மே, 2012
கவனிக்க வேண்டியவை!
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை!
பேஸ்ட் வாங்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை!
2.ஃப்ளோரைடு குறைந்த பேஸ்டை தேர்வுச்செய்யுங்கள்
3.குழந்தைகளுக்காக வாங்கும் பேஸ்டில் ஃப்ளோரைடு இல்லை என்பதை
உறுதிச் செய்யவும்.
4.ஜெல் பேஸ்டுகள் பற்களின் தேய்மானத்திற்கு காரணமாகும் என்பதால் க்ரீம் பேஸ்டுகளே
நல்லது.
5.பற்கள் சொத்தையாக காரணமாகும் இரசாயனங்கள் அடங்கியதுதான் அப்ரேஸிவ். ஆகவே இதன்
அளவு குறைந்த பேஸ்டை வாங்குங்கள்.
6.சோடியம் லாரைல், சோடியம்
லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட்
ஆகியன அடங்கிய பேஸ்டுகளை தவிருங்கள்.
திங்கள், 28 மே, 2012
மேற்படிப்பிற்கு உதவிடுவீர்.....
அஸ்ஸலாமு அழைக்கும்
பெரம்பலூர் மாவட்ட அளவில் பிளஸ் டூ வில் ( +2 )முதலிடம் பிடித்த மாணவன் ௧ட் டாப் 196.75.
தன்னுடைய மேற்படிப்புக்கு எந்த ஒரு வசதியும் இல்லாமல் இப்போது நமதூர் மக்களை எதிர்பார்த்து உள்ளார்.
நல்லுள்ளம் படைத்த அனைவரும் கீழ்க்கண்ட முகவரிக்கு தங்களுடைய பங்களிப்பை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
வீட்டின் முகவரி:
51 / 59 உசேன் ரலி தெரு ( கிழக்கு )
லப்பைகுடிக்காடு.
நன்றி: நமது நிருபர்
+2 மாணவருக்கு பரிசு TNTJ
+2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவருக்கு பரிசு
நடந்து முடிந்த(2011 2012) கல்வி ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காட்டைச் சேர்ந்த முஹம்மது ஜெக்கரியா, செல்வக்கனி அவர்களின் மகன் முஹம்மது யூனுஸ் அவர்கள் 1175/1200 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைகுடிக்காடு கிளை நிர்வாகிகள் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் ஊக்கப்பரிசாக ரூபாய் ஆயிரம் 25/12/2012 அன்று நடைப்பெற்ற மார்க்க விளக்கக் கூட்டத்தின் போது வழங்கி பாராட்டினர்..
TNTJ LBK
வெள்ளி, 25 மே, 2012
வியாழன், 24 மே, 2012
இறைவசனம்
அல் குரான்
அல்லாஹ் எந்த ஓர்
ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே!
பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம்
பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய
சுமையை போன்று எங்கள் மீதுசுமத்தாதிருப்பாயாக! எங்கள்
இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை
மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான
கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286
தேசிய கொடி
பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியே வடிவமைத்து
என்று நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்
லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle
Temple Barrister (வழக்ளறிஞர்)April
1867 தான் பணியே
தொடர்ந்தார் பாம்பேயின் முதல் வழக்ளறிஞர்ராக திகழ்ந்த இவர் . பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர் . 1895
பாம்பே உயர்நிதி மன்றத்தில் நீதி பதியாக
பணியாற்றினார் பின்பு 1902 இவரே
முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார் மற்றும் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு
வழங்குவதில் கண்ணிய மிக்கவராக இருந்தார் .பல வருடகாலம் பொது வாழ்க்கையில்
ஈடுபற்றார் இந்திய நேஷனல் காங்கிரஸின் முதல் முஸ்லிம் தலைவராக
தேர்தெடுக்கப்பட்டார் . 1876 ajmuan i islam இயக்கம் மூலமாக அணைத்து முஸ்லிம் மக்களின்
முனேற்றதிர்க்காகபாடுப்பட்டார் . இந்தியாவில் முஸ்லிம் மக்கள் அனைத்து மக்களுடனும்
சகோதரதுடனும் சரி சமமாகும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .அரசியல்
வாழ்கையில் நல்ல பெயரும் பெற்றார்
இந்தியாவில் மத சார்ப்பற்ற அரசியல் வர விரும்பினார் .அவருடைய மனைவி
தான் முதல் சுதந்திர இந்தியாவில் தேசிய கொடியே வடிவமைத்தார் . அவர்களின் குடும்பமே
சமுதயதிர்க்கும் கல்விக்கும் இந்திய விடுதலைக்கும் பெரும் பங்கு ஆற்றினார்கள்
ஆனால் தேசிய கொடியே
ஒரு முஸ்லிம் தான் வடிவமைத்தார் என்பதற்காக பல இந்துத்துவ அமைப்புகள் அவர்களுடைய
அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் இந்திய தேசிய கொடியே பயன் படுத்துவதே இல்லை , அவர்கள் அவர்களின் காவி கொடியே தான் ஏற்றுவார்கள்
. ஆனால் டெல்லி செங்கோட்டையில் தான் பிரதமர் கொடியே ஏற்றுகிறார்.அப்போ அந்த
கட்டிடம் யார் கட்டியது என்று அவர்கள் சிந்திக்கவில்லை . அதை ஷாஜகான் தான்
கட்டினர் என்று மறந்து விட்டனர்.
நன்றி: நமது நிருபர்
முழுமையான சுதந்திரம்
முழுமையான சுதந்திரம்
கேட்ட முதல் இந்தியன் யார் என்று உங்களுக்கு தெரியுமா ? உண்மையே உரக்க சொல்லுவோம் !!!!!!!
மறுக்க முடியாது உண்மையே
1929 � ஆம் ஆண்டு டிசம்பர் 29
- இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான்
இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence
India,as its goal) என்ற தீர்மானம் முன்
வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள்
பிறப்புரிமை � என்ற கோசத்தை வைத்தவர்
ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். மிகப்பெரும் தேசியத்
தலைவரும் கிலாபத் இயக்கத் தலைவர்களுள் ஒருவருமான மௌலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும்
இத்தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆங்கிலேயரிடமிருந்து நாம்
பெறவேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர்
இம்மண்ணிலிருந்து முழுமையாக வெளியேறி இம்மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை
ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் ஆகும் என்றார்.
நன்றி: நமது நிருபர்
மஞ்சள் காமாலைக்கு முதல் மருந்து
உணவுக்கட்டுப்பாடு தான் மஞ்சள் காமாலைக்கு முதல் மருந்து...!
.
.
மஞ்சள் காமாலை அறிகுறிகள்:-
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்
மற்றும் உடல் மஞ்சளாக இருக்கும். சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை மற்றும்
சிறுநீர் மஞ்சளாக வெளியேறும்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
காய்ச்சல் கடுமையாக இருக்கும், அவர்களுக்குப் பசி எடுக்காது. இதனை ஆரம்பத்திலே மருத்துவரிடம்
சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே
ஆபத்தாகிவிடும்.
தவிர்க்க வேண்டியவை:-
கோடைகால பயிற்சி முகாம்
கோடை கால விடுமுறையை மாணவ, மாணவியர்கள் வீணான பொழுதுபோக்கில் கழிக்காமல் அதை பயனுள்ளதாக ஆக்கி கொள்ளும் வகையில் நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் கற்றுக் கொடுக்கும் கோடை கால பயிற்சி முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் இம்மாதத்தில் நடத்தி வருகின்றது
அந்த வகையில் நமதூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 11/05/2012 முதல் 21/05/2012 வரை நடைபெற்றது.
மாணவர்களுக்கான வகுப்புகளை சகோ அபுல் கலாம் ஆசாத் (மாவட்ட மாணவரணி செயலாளர்) அவர்களும் பெண்களுக்கான வகுப்புகளை ஆலிமாக்களும் சிறப்பாக நடத்தினர்.
இம்முகாமில் டாக்டர் யாஸர் அரபாத் அவர்கள் மருத்துவத்துறையைப் பற்றியும், அதன் செயல்பாடுகளைப் பற்றியும் விவரித்தார்,இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.
மேலும் மங்கலமேடு காவல் துறை ஆய்வாளர் செல்வம் அவர்கள் காவல்துறையைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் விவரித்தார் இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். இறுதி நாளன்று நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
நன்றி : TNTJ LBK
புதன், 23 மே, 2012
முதல் இடம் பிடித்த முகமது யூனுஸ்
பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த லப்பைக்குடிகாடு முகமது யூனுஸ்
பெரம்பலூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் டாக்டர் ஆவதே லட்சியம் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் 55 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 3,685 மாணவர்கள், 3,469 மாணவிகள் என மொத்தம் 7,154 பேர் 21 மையங்களில் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தட்டி சென்றனர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் முகமது யூனுஸ் 1200க்கு 1175 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இவர் பாடவாரியாக தமிழ் 193, ஆங்கிலம் 189, கணிதம் 200, இயற்பியல் 200, வேதியியல் 199, உயிரியியல் 194 மதிப்பெண் பெற்றுள்ளார். குன்னம் தாலுகா, லப்பைக்குடிகாட்டை சேர்ந்த இவரது பெற்றோர் முகமது ஜக்கரியா, செல்வகனி. முகமது யூனுசிற்கு முகமது இஸ்மாயில்(15), அஸ்மிதா(14) ஆகிய தம்பி, தங்கைகள் உள்ளனர். இவர்களது தந்தை முகமது ஜக்கரியா மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வருகிறார். மருத்துவ படிப்புக்கு தேவையான கட்ஆப் மதிப்பெண் (196.75) பெற்றுள்ள முகமது யூனுஸ் டாக்டராவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
இதே பள்ளியை சேர்ந்த மாணவர் பட்டுராஜ் 1,174 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக தமிழ் 196, ஆங்கிலம் 189, கணிதம் 198, இயற்பியல் 195, வேதியியல் 199, உயிரியியல் 197 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் மருத்துவ படிப்புக்கு தேவையான கட்ஆப் மதிப்பெண் 197 பெற்றுள்ளதால் டாக்டராக ஆவதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இப்பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவர் மாதவன் 1,173 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3ம் இடம் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக தமிழ் 194, ஆங்கிலம் 186, கணிதம் 199, இயற்பியல் 195, வேதியியல் 200, உயிரியியல் 199 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவர் மருத்துவ படிப்புக்கு தேவையான கட் ஆப் மதிப்பெண் 198.25 பெற்றுள்ளதால் டாக்டராக ஆவதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
ஞாயிறு, 20 மே, 2012
செவ்வாய், 15 மே, 2012
இஸ்லாமிய வெறுப்பு மீடியாக்கள்
உலகில் யார் வேண்டுமானாலும் குண்டுவைக்கலாம்– பழியை ஏற்க அப்பா(வி) முஸ்லீம்கள் இருகிறார்கள் ...
இஸ்லாமியி வெறுப்பு மீடியாக்கள் நம்மை எப்படி மாற்றிவிட்டார்கள் பார்த்தீர்களா?
இந்துத்துவ அமைப்புகள் வெளிபட்டையாகவே பயிற்சி மேற்கொள்ளுவது போலும் நித்தம் நாம் இணைய தாளத்தில் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம் .எத்தனையோ குண்டுவெடிப்புகளிலும் சம்மந்த பட்டாலும் அவர்கள் தீவிரவாதிகள் இல்லை .செய்யாத தப்பிற்கும் முஸ்லிம்கள் தான் குற்றம் சாட்டுகிறார்கள் .வரலாறை படித்தவர்களுக்கும் உலகை படித்தவர்களுக்கும் முஸ்லிம்களை
இந்துத்துவ அமைப்புகள் வெளிபட்டையாகவே பயிற்சி மேற்கொள்ளுவது போலும் நித்தம் நாம் இணைய தாளத்தில் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம் .எத்தனையோ குண்டுவெடிப்புகளிலும் சம்மந்த பட்டாலும் அவர்கள் தீவிரவாதிகள் இல்லை .செய்யாத தப்பிற்கும் முஸ்லிம்கள் தான் குற்றம் சாட்டுகிறார்கள் .வரலாறை படித்தவர்களுக்கும் உலகை படித்தவர்களுக்கும் முஸ்லிம்களை
பற்றி தெரியும் .முஸ்லிம்களுக்காக சதி திட்டம்
பன்னுபவர்களையும் பற்றி நன்கு அறிவார்கள். அடுத்தவன் வயறு காய கூடாது என்று
நினைப்பவனே முஸ்லிம் .அடுத்தவனை சும்மா காய படுத்த நினைப்பான் முஸ்லிம் அல்ல
.நாங்கள் பட்ட காயங்களை சொல்ல வேண்டும் என்றால் சொல்லி கொண்டே போகலாம்
உலகில் எந்த மூலைமுடுக்கில் குண்டு வைத்தாலும்
அதற்க்கு விசாரணை தேவையில்லை , ஆராய்ச்சிகள் தேவையில்லை .. அது கண்டிப்பாக முஸ்லீம்கள் தான்
வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலையை உருவக்கிவிட்டார்கள் உண்மையான தீவிரவாதிகள்.
நியூயார்க் உலகவர்த்தக மையம் தகர்ந்து
கொண்டிருக்கும் அதே வேளையில் “இது ஒசாமா பின் லேடன் தான் செய்தான்” என்று
முன்பே முடிவு செய்து அறிவித்த ஜார்ஜ் புஷ்யின் அறிவு நுட்பத்தை அப்படியே
பின்பற்றுகிறது இன்றை உலக நாடுகளின் அரசு ஊடகங்கள். அவர்களுக்கு முழு பக்கபலமாக
நிற்கிறது இஸ்லாமிய வெறுப்பு உலக மீடியாக்கள்.
முஸ்லீம்களே…!விழிப்படையவில்லை
என்றால் – வருங்காலத்தில் நாம் விரட்டி அடிக்கப்படலாம்…!!
எச்சரிக்கை…
தீவிரமாக வாதம் செய்து நம்மை தீவிரவாதிகள் என்று
முத்திரை குத்திவிட்டார்கள் உண்மையான தீவிரவாதிகள்.. அவர்களை நாம் உலகத்திற்கு
இனம் காட்ட வேண்டும்.தீவிரவாதத்திற்கு எதிராக களமிறங்க வேண்டும். யார்
குற்றமிலைத்தாலும் முஸ்லிமோ , ஹிந்துவோ யாராக இருந்தாலும் தயவு தாட்சனையின்றி அவர்களை
தண்டிக்க வலியுறுத்தி கலத்தில் இறங்கவேண்டும்.
சத்திய மார்க்கத்திலேயே மரணிக்க வேண்டும், அநீதி இளைக்கபட்டோரே! அநீதி இளைக்கபட்டோரின் துஆ இறைவன் அங்கீகரிப்பான். இன்ஷாஅல்லாஹ்....
நன்றி: முகநூல் மற்றும் நமது நிருபர்
கேள்வி பதில் போட்டி
கேள்வி பதில் போட்டி
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு
கிளையில் 11-05-2012 முதல் அறிவுப்போட்டி துவங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...வாரந்தோறும் ஆண்களுக்கு ஒரு கேள்வியும், பெண்களுக்கு ஒரு கேள்வியும் கேட்கப்பட்டு சரியான விடை சொல்கின்ற ஒரு சகோதரருக்கும், ஒரு சகோதரிக்கும் பரிசு வழங்கப்படும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் தரப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சரியான பதில் சொல்லியிருப்பின் குலுக்கல் முறையில் ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும். அறிவுப்போட்டியில் இந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகள்
1.கேள்வி:திருக்குர்ஆனில் திரும்பத் திரும்ப ஓதப்படுகின்ற வசனம் எந்த அத்தியாயத்தில் உள்ளது?
பதில்: அத்தியாயம் : 55 சூரா -அர்ரஹ்மான்
2.கேள்வி: மரியம் (அலை) எந்த நபியின் சகோதரி என அழைக்கப்படுவார்கள்?
பதில்: ஹாருன் (அலை) 19:28
சரியான பதில் எழுதி குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
1.ஆண்கள: எஸ். முஹம்மது யூசுப்
வழங்கப்பட்ட பரிசு – லேப்டாப் பேக்
2.பெண்கள்: பி. அஸ்தர் பேகம்
வழங்கப்பட்ட பரிசு: ஹாட் பாக்ஸ்
நன்றி: TNTJ. LBK
திங்கள், 14 மே, 2012
இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் வரும்
கொடுங்கோலன் என்று வர்ணிக்கப்படுகின்ற ஹிட்லர் கூறினான்
"என்னால் எல்லா யூதர்களையும் கொன்றிருக்க முடியும்,
ஆனால் நான் சிலரை விட்டுவைத்தேன், அப்போதுதான் இந்த உலகிற்கு தெரியும் நான் ஏன் அவர்களை கொன்றேன் என்று".
எங்களுடைய, பால்மணம் மாறா பச்சிழம் குழந்தைகளை கொன்றும் குவிக்கும் கொடியவர்கள் இவர்கள்...
இதோ பாருங்கள் இந்த குழந்தையை....
யா அல்லாஹ் என்று வான் நோக்கி அழைக்கிறது...
இதுவும், இது போன்ற எத்தினையோ குழந்தைகளும் சென்றுவிட்டனர் நம்மை விட்டு...
அந்த குழந்தைகளை பார்க்கும் போது நமது நெஞ்சில் ஓர் வலி...
விரலால் அழுத்தவே அஞ்சும் மேனியில், தோட்டாவால் துளை போட்ட கொடியவர்களே...
உங்களுக்கு இதயம் இல்லையா????
நீங்கள் மார்போடு கட்டியணைக்கும் உங்கள் குழந்தைகள் போன்று
இவர்களும் ஒரு தாயின் குழந்தைதானே...
இன்று எங்கள் குழந்தைகளின் மார்பில் கட்டியணைப்பது
உங்கள் துப்பாக்கி தோட்டாக்கள்....
இன்னும் எத்தினையோ சொல்லிக் கொண்டே போகலாம்
இந்த கண்ணீர் சரித்திரங்களை...
இது கண்ணீர் தேசம்...
ஞாயிறு, 13 மே, 2012
மாற்றுமத கலாச்சாரம்+வீண்விரயம்=வழிகேடு
புதிய கலாச்சாரமாக மாறிவரும் திருமணம்
நமதூரில் கடந்த காலங்களில் திருமணம் நிகழ்சிகள் எப்படி நடந்து கொண்டிருப்பது என்று தங்கள் அறிந்ததே. கடந்த சில நாட்களாக மாற்றுமத கலாச்சாரமாக பூ போக்கை, பூங்கொத்து (Flower Pack) கொடுக்கபடுகிறது.
இது கொடுப்பது அன்பளிப்பு என்று கருதினாலும், முதலில் இது மாற்றுமத கலாச்சாரம் என்பதை நாம் நன்கு உணரவேண்டும்.
இந்த கலாச்சாரத்தின் மூலமாக பள்ளிவாசலுக்கு வெளிப்பக்கம், வரும்பாதையில் இந்த பூக்களை வைத்து விற்றுகொண்டிருகிரர்கள் நமது சகோதரர்கள்.
நமதூர் இமாம்களிடம் கேட்டால் அவர்களும் தவறு என்றுதான் கூறுகிறார்.
எவர் நமது மார்கத்திற்கு எதிராக மாற்றுமத கலாச்சாரத்தை பின்பற்றுகிரர்களோ அவர் அந்த மதத்தை சார்தவராவார். (அல் ஹதீஸ்)
நிச்சயமாக வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள் (அல் குர்ஆன்)
நன்றி: நமது நிருபர்
சனி, 12 மே, 2012
இஸ்லாத்தை பாதுகாப்பவன் இறைவனே...
இஸ்லாமியமார்கத்தை பாதுகாப்பவன் இறைவனே...
கண்ணியமும் பெரும் மகத்துவமும் மிக்க இந்த இஸ்லாம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தை எப்படி உயர்திசென்றது, அதன் எதிரிகளை எப்படி வீழ செய்தது என்பதை வரலாறுகள் நமக்கு மறைக்கபட்டளும் அதன் பிரதிபலிப்பை நம்மால் என்றும் காணமுடியும்.
துருக்கியை ஆட்சி செய்த உதுமானிய கிளபாத் ( இஸ்லாமிய பேரரசு ) அதன் ஆட்சி அதிகாரத்தை துச்பிரயொகம் செய்துகொண்டிருந்தது. அனச்சரங்களும் அட்டூழியங்களும் மிகைத்திருந்த சமயத்தில், அபோது இஸ்லாத்தின் மிகபெரிய எதிப்படையான மங்கோலிய பேரரசு படை இருந்தது. இவர்கள் எதையும் சிந்திக்காத கொலைகள் கொள்ளைகள் என அரக்ககுனங்களோடு வாழ்ந்தார்கள் என்பது பள்ளிகூட புத்தகம் நமக்கு உணர்த்தும்.
அப்படிப்பட்ட மங்கோலியர்கள் உதுமானிய கிளபாதை அடித்து ஒழித்துகட்டினார்கள். உதுமானிய கிளபாத் இவர்கள் மூலமே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இஸ்லாத்தை அழிக்கநினைத்த இவர்கள் மனதில் அந்த நூற்றாண்டிலேயே இவர்களுள் இஸ்லாம் நுழைந்தது.
அரக்கர்களாக வாழ்ந்த மங்கோளியர்களையே மண்டியிட வைத்தது தான் இந்த இஸ்லாம்.
இன்றும் அவர்களின் ஒருசிலர் இஸ்லாமியர்களாக வாழ்வதை நம்மால் பார்க்கமுடியும்.
இப்படிப்பட்ட முழுமையான உண்மையான வரலாறுகளை பள்ளி, கல்லூரி பாட நூல்களில் போட்டாள் இஸ்லாமிய வளர்ச்சி வேகம் அதகரிக்கும் என்பதை காபிர்கள் நன்கு உணர்திருக்கிரார்கள்.
உண்மையை சொல்ல துணிவிருந்தால்..இந்த கல்வித்திட்டத்தை இயற்றியவர்கள்.... இப்படிப்பட்ட நிகழ்வுகளை பள்ளி, கல்லூரி பாட நூல்களில் போடமுடியுமா?
நன்றி: நமது நிருபர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)